II


90திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



      கரணம் - கைத்தொழில்; இது வட்டணை எனப்படும், வட்டணை
நான்கு - அபவேட்டிதம், உபவேட்டிதம், யாவர்த்திதம், பரிவர்த்திதம்
என்பன.

"தற்சனி முதலாப் பிடித்த லகம்வரின்
அத்தொழி லாகும் அபவேட் டிதமே"

 
"தற்சனி முதலா விடுத்தல் புறம்வர
உய்த்த லாகும் உபவேட் டிதமே"
 
"கனிட்ட முதலாப் பிடித்த லகம்வர
விடுத்த லாகும் வியாவர்த் திதமே"
 
"கனிட் முதலா விடுத்தல் புறம்வரப்
படுத்த லாகும் பரிவர்த்திதமே"

என்வற்றால் அவற்றி னிலக்கணங்களை யறிக. இருவகைக்கரம் -
இணையாவிணைக்கை, இணைக்கை என்பன; இவற்றுள் முன்னது ஒற்றைக்கை
யெனவும், பிண்டி யெனவும் பெயர்பெறும்; பின்னது இரட்டைக்கை யெனவும்,
பிணையல் எனவும் பெயர் பெறும்; ஒற்றைக் கை - பதாகை, திரிபதாகை,
கத்தரிகை, தூபம், அராளம், இளம் பிறை, சுகதுண்டம், முட்டி, கடகம், சூசி,
கமலகோசிகம், காங்கூலம், கபித்தம், விற்பிடி, குடங்கை, அலாபத்திரம்,
பிரமரம், தாம்பிரசூடம், பசாசம், முகுளம், பிண்டி, தெரிநிலை, மெய்ந்நிலை,
உன்னம், மண்டலம், சதுரம், மான்றலை, சங்கு, வண்டு, இலதை, கபோதம்,
மகரமுகம், வலம்புரி என முப்பத்துன்று வகைப்படும்; இரட்டைக்ககை -
அஞ்சலி, புட்பாஞ்சலி, பதுமாஞ்சலி, கபோதம், கற்கடகம், சுவத்திகம், கடகா
வருத்தம், நிடதம், தோரம், உற்சங்கம், புட்பபுடம், மகரம், சயந்தம்,
அபயவத்தம், வருத்தமானம் எனப் பதினைந்து வகைப்படும், பிண்டியும்,
பிணையலும் அன்றி, எழிற்கை, தொழிற்கை என்ற இரண்டு வகையும் உண்டு.
புரிகை என்பது அங்கக்கிரியை பதினாறனுள் ஒன்றாகக் காணப்படுகிறது.
வேறு நூலிலுள்ளபடி கால்வகை காட்டுதும் : தேசிக்குரிய கால் - கீற்று,
கடிசரி, மண்டலம், வர்த்தனை, கரணம், ஆலீடம், குஞ்சிப்பு, கட்டுப் புரியம்,
களியம், உள்ளாளம், கட்டுதல், கம்பித்தல், ஊர்த்ல், நடுக்கல், வாங்குதல்,
அப்புதல், அனுக்குதல், வாசிப்பு, குத்துதல், நெளிதல், மாறுகால், இட்டுப்
புகுதல், சுற்றி வாங்குதல், உடற்புரிவு என இருபத்து நான்கு வகைப்படும்;
வடுகிற்குரிய கால்கள் - சுற்றுதல், எறிதல், உடைத்தல், ஒட்டுதல், கட்டுதல்,
வெட்டுதல், போக்கல், நீக்கல், முறுக்கல், அனுக்கல், சீசல், குடுப்புக்கால்,
கத்தரிகைக்கால், கூட்டுதல் எனப் பதினான்கு வகைப்படும். கவான் -
தொடையின் றொழில். மடிப்பு - பக்கங்களின் அசைவுத் தொழில். முன்
அங்கம் முதலாக எண்ணப் பட்ட இருபது பேதங்களும், இச்செய்யுளிற் கூறிய
பூசாரி, ககனசாரிகளும், மேல்வரும் தேசிசாரி முதலாயினவும் இன்னவென
நன்கு விளங்கவில்லை. (11)

ஏற்றதிக் கிராந்த மாதியா முப்பத்
     திருவகைத் தேசிசா ரிகளுங்
காற்றினுங் கடுந்தேர்ச் சக்கர முதலாங்
     ககனசா ரிகைகளே ழைந்துஞ்