II


92திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



அளந்திடு சரளை யாதிகட் டளையே
     ழைந்துநன் கமைந்தபா வாதி
விளம்பிய மூன்று கலப்பு மீறாக
     விளைத்திடுங் கூத்தக மார்க்கம்.

     (இ - ள்.) கிளந்த மாத்திரையின் கதிகளும் - கூறப்பட்டட
மாத்திரையின் கதிகளும், சொல்லும் கீதமும் பாடமும் எழுத்தும் -
சொற்களும் கீதங்களும் பாடங்களும் எழுத்துக்களும், வளம்தரு மணி
பந்தம் ஆதி கீதத்தின் வகுத்த கட்டளை எழு நான்கும் - வளப்பத்தைத்
தருகின்ற மணிபந்தம் முதலாகக் கீதத்தின்கண் வகுத்த கட்டளைகள்
இருபத்தெட்டும், அளந்திடு சரளை ஆதி கட்டளை ஏழைந்தும் -
அளவறுக்கப்பட்ட சரளை முதலிய கட்டளைகள் முப்பத்தைந்தும், நன்கு
அமைந்த பாவ ஆதி விளம்பிய மூன்று கலப்பும் ஈறாக விளைந்திடும்
கூத்து அகமார்க்கம் - நன்றாக அமைந்த பாவமும் தாளமும் அராகமுமாகப்
பரதநூலுட் கூறப்பட்ட இம்மூன்றும் தம்முட் பிளவுபடாமல் ஒத்தபான்மை
இறுதியாகச் செய்யப்படுங் கூத்து அகமார்க்கமாகும்.

     தாள மாத்திரையின் கதிகள் - கொட்டு, அசை, தூக்கு, அளவு
எனப்படும். சொல் - உட்சொல், புறச்சொல், ஆகாயச் சொல் என
மூவகைப்படும்; உட்சொல் - நெஞ்சொடு கூறல்; புறச்சொல் -
கேட்போர்க்கு குரைத்தல்; ஆகாயச்சொல் - தானே கூறல். இனி தற்கூற்று,
புறக்கூற்று, முன்னிலைக் கூற்று, விண்ணின் கூற்று எனச் சொல்லை நான்கு
வகையாகப் பிரிப்பாருமுளர். கீதம் - இசை. பாடம் - கீதவுரு; இசைப்பாட்டு.
எழுத்து ? ஆளத்திக்குரிய எழுத்துக்கள். கட்டளை - வரையறை. (14)

[அறுசிரடியாசிரியவிருத்தம்]
உரைத்தவிக் கூத்துக் கற்கும் போதுதன் னுடம்பிற் சால
வருத்தநோ யெய்தி யிந்த வருத்தநான் மறையுந் தேறா
அருத்தமா யறிவாய் வெள்ளி யம்பலத் தாடி நின்ற
நித்தனார் தமக்கு முண்டே யென்பது நினைவிற்
கொண்டான்.

(இ - ள்.) உரைத்த இக்கூத்துக் கற்கும்போது - சுறிய இந்தக்
கூத்தினைப் பயிலும் பொழுதில், தன் உடம்பில் சால வருத்த நோய
எய்தி - தனது உடம்பின்கண் மிகவும் துன்பமாகிய நோய் எய்தப்
பெற்று, இந்த வருத்தம் - இத்துன்பமானது, நால்மறையும் தேறா
அருத்தமாய் - நான்கு மறைகளாலும் அறியப்படாத பொருளாயும்,
அறிவாய் - ஞான வடிவாயும், வெள்ளி அம்பலத்து ஆடிநின்ற
நிருத்தனார் தமக்கும் - வெள்ளி மன்றின்கண் ஆடி நின்றருளும்
கூத்தப்பிரானுக்கும், உண்டே என்பது நினைவிற் கொண்டான் -
உளதாமே என்னும் எண்ணத்தை மனதிற் கொண்டான்.

     இந்த வருத்தம் - இத்தன்மையான வருத்தம். எப்பொழுதும் ஆடு
கின்றவரென்பார் ‘ஆடி நின்ற’ என்றார். என்பது - என்னும் எண்ணம்;
என்று எனக் கொள்ளினுமாம். (15)