II


கான்மாறியாடின படலம்93



கரியதா மரைக்கண் ணானுங் கமலநான் முகனுங் காண்டற்
கரியதா ளொன்றே நோவ வாற்ற நாணிற்ப தந்தோ
உரியதா மிதனைக் கற்று வருத்தமுற் றோர்ந்து மீது
தெரியநா னிருப்ப தேயோ வறனெனச் சிந்ததை நோவான்.

     (இ - ள்.) கரிய தாமரைக் கண்ணாலும் - கரிய நிறத்தைனையுயை்
தாமரை மலர்போலுங் கண்களையுடைய திருமாலும், கமல நான்முகனும்
காண்டற்கு அரிய தாள் ஒன்றே - தாமரை மலரில் வசிக்கும் பிரமனும்
காணுதற்கரிய திருத்தாள் ஒன்றே, நோவ - துன்பமுற, ஆற்ற நாள் நிற்பது
- பல நாளாக ஆடி நிற்கின்றது; அந்தோ - ஐயோ, உரியது ஆம் இதனைக்
கற்று வருத்தம் முற்றும் ஓர்ந்து - உரியதாகிய இப்பரத நூலைக் கற்று
அதனால் நேரும் வருத்தம் அனைத்தையும் அறிந்து வைத்தும், ஈறு தெரிய
நான் இருப்பதேயோ அறன் எனச் சிந்தை நோவான் - இவ் வருத்தத்தைக்
காண நான் உயிருடன் இருப்பதோ அறமாகும் என்று மணம்
நோவானாயினன்.

     தாளின் அருமையைப் புலப்படுப்பான் அரியும் அயனும் காண்டற்கரிய
தாள் என்றான். தாள் ஒன்றே - தாள்களில் ஒன்றே; ஒன்றே நிற்பது எனக்
கூட்டுக. இது தெரிந்து நான் வாளாவிருப்பது அறமோ என்றுரைப்பினும்
அமையும். அந்தோ, இரக்கப் பொருள் குறித்த இடைச்சொல். (16)

வடுப்படு பிறவிப் பௌவ வரம்புகாண் கின்ற நாள்வந்
தடுப்பவர் யாவ ரேனு மவர்க்கெலாம் போகம் வீடு
கொடுப்பவர் செய்யு மிந்தக் கூத்தையெப் படிநாஞ சென்று
தடுப்பது தகாதன் றேனும் வருந்துமே சரண மென்னா.

     (இ - ள்.) வடுப்படு பிறவிப் பௌவம் வரம்பு காண்கின்ற நாள் வந்து
அடுப்பவர் யாவரேனும் - குற்றம் பொருந்திய பிறவிக்கடலின் கரையைக்
காணுதற்குரிய நன்னாள் வந்து பொருந்தப் பெற்றவர் யாவராயினும், அவர்க்கு
எலாம் போகம் வீடு கொடுப்பவர் செய்யும் இந்தக் கூத்தை -
அவரனைவர்க்கும் இன்பத்தையும் வீடுபேற்றையும் அளித்தருளும் இறைவன்
செய்கின்ற இந்தக் கூத்தினை, நாம் சென்று எப்படித் தடுப்பது - நாம் போய்
எங்ஙனம் தடுப்பது; தகாது - தகுதியன்று; அன்றேனும் - தடுப்பதன்றாயின்,
சரணம் வருந்துமே என்னா - திருவடி வருந்துமே என்று கருதி.

     வந்து அடுப்பவர் யாவரேனும் அவர்க்கெலாம் போகத்தையும்,
காண்கின்ற நாள் வீட்டையும் கொடுப்பவர் என்றுரைத்தலுமாம்; காண்கின்ற
நாளிலே வந்து அடுப்பவர்க் கெல்லாம் பேரின்பமாகிய வீட்டை யளிப்பவர்
என்று கூறுதலும் பொருந்தும்; வந்து அடுக்கும் நாள் பிறவிக்கடலின் வரம்பி
காண்கின்ற நாளாகு மென்க. எப்படித் தடுப்பது - தடுப்பது எங்ஙனம்
பொருந்தும். அன்றேனும் - தகா தென ஒழியின்; உம் அசை. (17)