இதற்கிது துணிவென் றுன்னி யெழுந்துபோய்ச் சிவனி ராவிற்
கதக்களிற் றொருத்த லேந்துங் கதிர்மணிக் குடுமிக் கோயில்
மதக்கரி யுரியி னாற்கு வரம்பறச் சிறந்த பூசை
விதப்பட யாம நான்கும் விதிவழி யியற்றல் செய்யா. |
(இ
- ள்.) இதற்கு இது துணிவு என்று உன்னி - இதற்கு இதுவே
துணிபொருள் என்று ஒன்றைக் கருதி, எழுந்துபோய் - எழுந்து சென்று,
சிவன் இரவில் - சிவராத்திரியில், கதக்களிற்று ஒருத்தல் ஏந்தும் கதிர்மணிக்
குடுமிக்கோயில் - சினத்தை யுடைய எட்டு யானைகள் தாங்கும்
ஒளிபொருந்திய மணிகளிழைத்த சிகரத்தை யுடைய இந்திர விமானத்தில்
எழுந்தருளிய, மதக்கரி உரியினாற்கு - மதயானையின் தோலாகிய
போர்வையை யுடைய சோமசுந்தரக் கடவுளுக்கு, வரம்பு அறச் சிறந்த பூசை
- எல்லை யில்லையாகச் சிறந்த பூசையினை, விதப்பட - வகைப்பட, யாமம் நான்கும் -
நான்கு யாமங்களிலும், விதிவழி இயற்றல் செய்யா - (ஆகம)
விதிப்படி செய்து.
துணிவு
- செய்யத்தக்கது. களிறும் ஒருத்தலும் ஆண்பாற் பெயர்; களிறாகிய ஒருத்தலென்க. விதப்பட
- பல் வகையாக. இயற்றல் செய்யா - இயற்றுதலைச் செய்து; இயற்றி. (18)
விண்டக மலர்த்தா ளேத்தி வெள்ளியம் பலத்து ளன்பர்
தொண்டக மலர நின்ற சோதிமெய்ஞ் ஞானக் கூத்தைக்
கண்டக மகிழ்ந்து தாழ்ந்து கட்புனல் சோரக் செங்கை
முண்டக முடிமே லேற்றி முகிழ்த்துநின் றிதனை வேண்டும்.
|
(இ
- ள்.) அகம் விண்டு - மனமுருகி, மலர்த்தாள் ஏத்தி - தாமரை மலர் போன்ற
திருவயத் துதித்து, வெள்ளியம் பலத்துள் அன்பர் தொண்டு அகம் மலர நின்ற சோதி -
வெள்ளியம் பலத்திலே அன்பர்களின் தொண்டு பூண்ட உள்ளத் தாமரை மலர நின்ற பேரொளி
யாகிய இறைவனது, மெய்ஞ் ஞானக் கூத்தைக் கண்டு - உண்மை ஞானத் திருக்கூத்தைத் தரிசித்து,
அகம் மகிழ்ந்து தாழ்ந்து - மனமகிழ்ந்து வணங்கி, கண்புனல் சோர - கண்களில் ஆனந்த
வருவி பொழிய, செங்கை முண்டகம் முடிமேல் ஏற்றி முகிழ்த்து
நின்று - சிவந்த கையாகிய தாமரை மலர்களைத் தலையின்மேற் கூப்பி
நின்று, இதனை வேண்டும் - இதனை வேண்டுவா னாயினன்.
விண்ட
என்னும் பெயரெச்சம் தொக்கதாகக் கொண்டு, அகத்தில்
மலர்ந்த என்றுரைத்தலுமாம். அம்பலத்துள் நின்ற சோதியின் கூத்தைக்
கண்டு என்க. (19)
நின்றதா ளெடுத்து வீசி யெடுத்ததா ணிலமீ தூன்றி
இன்றுநான் காண மாறி யாடியென் வருத்த மெல்லாம்
பொன்றுமா செய்தி யன்றேற் பொன்றுவ லென்னா வன்பின்
குன்றனான் சுரிகை வாண்மேற் குப்புற வீழ்வே னென்னா. |
|