(இ
- ள்.) நின்றதாள் எடுத்து வீசி - (ஐயனே) ஊன்றிய திருவடியை
மேலெடுத்து வீசியும், எடுத்த தாள் நிலம்மீது ஊன்றி - தூக்கிய திருவடியை
நிலத்தின் மேல் ஊன்றியும், இன்று நான் காண மாறி ஆடி - இன்று
அடியேன் காணுமாறு (இங்ஙனம் கால்) மாறி ஆடுதலைப் புரிந்து, என்
வருத்தம் எல்லாம் பொன்றுமா செய்து - என் துன்பமனைத்தும் அழியுமாறு
செய்தருள்க; அன்றேல் - அங்ஙனஞ் செய்தருளாவிடில், பொன்றுவல் என்னா
- நான் இறந்துபடுவன் என்று திருமுன் விண்ணப்பித்துக் கொண்டு, அன்பின்
குன்று அனான் - அன்பில் மலையை ஒத்த இராசசேகர பாண்டியன், சுரிகை
வாள் மேல் குப்புற வீழ்வேன் என்னா - உடை வாளின்மேற் குப்புற
விழுவேன் என்று கருதி.
எடுத்த
தாள் - குஞ்சித்த திருவடி. பொன்றுமாறு என்பது ஈறுதொக்கது.
சலியாத அன்புடையான் என்பார், அன்பின் குன்றனான் என்றார்.
சுரிகையாகிய வாள் என்க. குப்புற விழுதல் - வாளை எதிரே நிறுத்தி
அதன்மேற் பாய்தல். (20)
நாட்டினான் குறித்துப் பாய நண்ணுமுன் னிடத்தா ளூன்றி
நீட்டினான் வலத்தாள் வீசி நிருமலன் மாறி யாடிக்
காட்டினான் கன்னி நாடன் கவலையும் பாச மூன்றும்
வீட்டினான் பரமா னந்த வேலையுள் வீட்டி னானே. |
(இ
- ள்.) நாட்டினான் குறித்துப்பாய நண்ணுமுன் - கீழே
அவ்வுடைவாளை நட்டு அதன்மேற் பாய்தற்கு நண்ணு முன்னரே, இடத்தாள்
ஊன்றி - இடது தாளைக் கீழே ஊன்றி, வலத்தாள் நீட்டினான் வீசி - வலது
திருவடியை மேலெடுத்து வீசி, நிருமலன் -இறைவன், மாறி ஆடிக்
காட்டினான் - கால்மாறி ஆடிக்காட்டி, கன்னி நாடன் கவலையும் பாச
மூன்றும் வீட்டினான் - கன்னி நாடனாகிய பாண்டிய னுடைய கவலையையும்
மும்மலங்களையும் அழித்து, பரமானந்த வேலையுள் வீட்டினான் -
(அவனைப்) போன்பக் கடலுள் வீழ்த்தினான்.
நான்கடியிலும்
முன்னுள்ள முற்றுக்கள் எச்சமாயின - காட்டினான்
என்பதனை முற்றாக்கியும் கன்னிநாடன் என்பதனை எழுவாயாக்கியும்
பாண்டியனானவன் கவலையும் பாசமூன்றும் வீட்டித், தன்னை வேலையுள்
வீழ்த்தினான் என்றுரைத்தலுமாம். வீழ்த்தி என்பது வீட்டியென மருவிற்று.
(21)
விளைகள்வாய் வீழ்ந்த வண்டின் மெய்யறி வின்ப மென்னும்
அளவிலா முந்நீர் வெள்ளத் தாழ்ந்தவ னெழுந்து பின்னும்
உளமும்வா சகமு மெய்யு முடையவ னதுவே யாகப்
பளகிலா வன்பு தானே படிவமாய்ப் பழிச்ச லுற்றான். |
(இ
- ள்.) விளைகள் வாய் வீழ்ந்த வண்டின் - இனிமை மிக்க
மதுவின்கண் வீழ்ந்த வண்டைப்போல, மெய் அறிவு இன்பம் என்னும்
அளவு இலா முந்நீர் வெள்ளத்து ஆழ்ந்தவன் - உண்மை யறிவின்பம்
என்று சொல்லப்படும் அளவில்லாத கடல் வெள்ளத்தில் மூழ்கிய
பாண்டியன், எழுந்து பின்னும் - எழுந்து மீண்டும், உளமும் வாசகமும்
மெய்யும்
|