(இ
- ள்.) பெரும - பெருமானே, இந்நகர் அடியனேன் பெயரினால்
விளங்க - இந்த நகரம் அடியேன் பெயரினால் விளங்குமாறு, கருணை
செய்தி என்று இரந்திட - அருள்புரிவாயாகவென்று இரந்துவேண்ட, அம்
கருணைக்கடலும் - அழகியகருணைக் கடலும், அருள்நயந்து நேர்ந்து
அனையதே ஆக எனப்பணித்தான் - அருளினால் விரும்பி உடன்பட்டு
அங்ஙனமே ஆகுக என்று அருளினான்; உருகெழுஞ்சின உரகமும் -
(கண்டோர்க்கு) அச்சந்தருதலைப் பொருந்திய சினத்தையுடைய அப்பாம்பும்,
ஒல்லெனச் செல்லா - விரைந்து சென்று.
செய்தி
- செய்வாய்; த் எழுத்துப்பேறு. ஆக என்பதன் அகரந்
தொக்கது. உரு - உட்கு; அச்சம்.
என்பது தொல்காப்பியம்.
ஒல்லென, விரைவுக் குறிப்பு. செல்லா, செய்யா
வென்னும் வாய்பாட்டு வினையெச்சம். (22)
கீட்டி சைத்தலைச்
சென்றுதன் கேழ்கிளர் வாலை
நீட்டி மாநகர் வலம்பட நிலம்படிந் துடலைக்
கோட்டி வாலைவாய் வைத்துவேற் கொற்றவற் கெல்லை
காட்டி மீண்டரன் கங்கண மானது கரத்தில். |
(இ
- ள்.) கீழ்த்திசைத்தலைச் சென்று - கீழைத்திசையின்கட் சென்று,
தன் கேழ்கிளர்வாலை நீட்டி - தனது ஒளிபொருந்தி விளங்கும் வாலை
நீட்டி, மாநகர் வலம்பட நிலம்படிந்து - பெரிய அந்நகருக்கு வலமாக
நிலத்திற்படிந்து, உடலைக் கோட்டி - உடலை வளைத்து, வாலைவாய்
வைத்து - வாலைத் தனது வாயில் வைத்து, வேல் கொற்றவற்கு
எல்லைகாட்டி - வேற்படை யேந்திய பாண்டி வேந்தனுக்கு எல்லையைக்
காட்டி, மீண்டு அரன் கரத்தில் கங்கணம் ஆனது - மீள இறைவனது
திருக்கரத்தின்கட் கங்கணமாயது.
கீழ்த்திசை
என்பது கீட்டிசை என மருவியது. கோட்டி -
வளைத்து. (23)
சித்தர்
தஞ்சின கரத்தெழுந் தருளினார் செழியன்
பைத்த வாலவாய் கோலிய படிசுவ ரெடுத்துச்*
சுத்த நேமிமால் வரையினைத் தொட்டகழ்ந் தெடுத்து
வைத்த தாமென வகுத்தனன் மஞ்சுசூ ழிஞ்சி. |
(இ
- ள்.) சித்தர் - சித்தமூர்த்திகள், தம் சினகரத்து எழுந்தருளினார்
- தமது திருக்கோயிலின்கண் எழுந்தருளினார்; செழியன் - வங்கிய
சேகரபாண்டியன், பைத்த ஆலவாய் கோலியபடி - படத்தையுடைய பாம்பு
வளைந்து எல்லை வரையறுத்தபடி, சுவர் எடுத்து - மதிலுக்கு அடிநிலை
பாரித்து, சுத்த மால் நேமி வரையினை - தூய பெரிய சக்கரவாள மலையை,
தொட்டு அகழ்ந்து எடுத்து வைத்தது ஆம் என - அடியோடு தோண்டி
(பா
- ம்.) * சுவடெடுத்து.
|