ஐம்பத்து
மூன்றாவது கீரனைக் கரையேற்றிய படலம்
|
[கலிநிலைத்துறை]
|
மார னைப்பொடி
கண்டவ னந்தண மைந்தனுக்
கார நற்கன கக்கிழி யீந்த தறைந்தனம்
ஏர னத்திரள் சூழ்மல ரோடை யிடத்தினுங்
கீர னைக்கரை யேற்றிய வாறு கிளத்துவாம். |
(இ
- ள்.) மாரனைப்பொடி கண்டவன் - மன்மதனை நீறாக்கிய
இறைவன், அந்தண மைந்தனுக்கு - மறைச்சிறுவனாகிய தருமிக்கு. ஆர -
மனமகிழ, நல்கனகக் கிழி ஈந்தது அறைந்தனம் - நல்ல பொற்கிழியை
அளித்தருளிய திருவிளையாடலைக் கூறினாம்; ஏர் அனத்திரள் சூழ்மலர்
ஓடை இடத்தினும் - அழகிய அன்னப்பறவையின் கூட்டம் சூழ்ந்த
பொற்றாமரை வாவியினின்றும், கீரனைக் கரையேற்றியவாறு - நக்கீரனைக்
கரையேற்றிய திருவிளையாடலை, கிளத்துவாம் - (இனிக்) கூறுவாம்.
பொடி
கண்டவன் - பொடியாக்கியவன்; ஒரு சொல். கிழி
பின்னர்க்கொடுக்கப்படுவதாயினும், அதற்கேதுவான 'கொங்குதேர் வாழ்க்கை'
என்னும் பாசுரம் முன்பு அளிக்கப்பெற்றமையின் 'கனகக்கிழி யீந்தது'
என்றார். (1)
தாழ்ந்த
வேணிய னெற்றி முளைத்த தழற்கணாற்
போழ்ந்த நாவல னாடக பங்கயப் பொய்கைவாய்
வீழ்ந்த ரும்படர் வேலையியல் வீழ்ந்தனன் விம்முறச்
சூழ்ந்த நாவலா கண்டு பொறாது துளங்குவார். |
(இ
- ள்.) தாழ்ந்த வேணியன் - நீண்ட சடையையுடைய சோமசுந்தரக்
கடவுளின், நெற்றி முளைத்த தழல் கணால் - நெற்றியிற்றோன்றிய
அனற்கண்ணால் போழ்ந்த நாவலன் - பிளக்கப்பட்ட கீரன், ஆடக பங்கயப்
பொய்கைவாய் வீழ்ந்து - பொற்றாமரை வாவியுள் வீழ்ந்து, அரும்படர்
வேலையில் வீழ்ந்தனன் விம்முற - கடத்தற்கரிய துன்பக்கடலுள் வீழ்ந்து
வருந்த, சூழ்ந்த நாவலர் கண்டு பொறாது துளங்குவார் - சூழ்ந்துநின்ற
ஏனைப் புலவர்கள் (அதனைக்) கண்டு பொறுக்கலாற்றாது வருந்துவாராயினர்.
தாழ்ந்த
- தொங்கிய; நீண்ட, போழ்ந்த என்பது பாயப்பட்ட என்னும்
கருத்திற்று. படர் - துன்பம். வீழ்ந்தனன், முற்றெச்சம். (2)
|