தழுவி, இன் இசை பாடக்கனிந்து
- இனிய இசை பாடத் திருவுள்ளங்
கனிந்து, அவன் செய்த தீங்கு பொறுத்ததும் அன்றி - அவன் செய்த
பிழையைப் பொறுத்தருளியதும் அல்லாமல், திண்தே ரொடும்
மொய்கொள்வாளும் கொடுத்தனன் - திண்ணிய தேரும் வலிய வாளும்
கொடுத்தருளினன்; புண்ணியமூர்த்தியே - இந்தப் புண்ணிய வடிவாகிய
இறைவன்.
இலங்கையர்
வேந்தனாகிய இராவணன் குபேரனைவென்று
புட்பகத்தின் மீது இவர்ந்து திருக்கைலையை அடைந்த வழி அவ்விமானம்
தடைப்பட்டதாகலின் சினங்கொண்டு அம்மலையைப் பெயர்த்
தெடுக்கலுற்றவன் இறைவனது திருவடி விரனுதியால் ஊற்றப்பட்ட மலையின்
கீழ்க்கிடந்து உழந்து, பின் தெளிந்து இறைவனை இசைபாடி வழுத்த அவர்
அவனுக்கு நெடிய வாழ்நாளும், தேரும், வாளும் கொடுத்தருளினர் என்பது
வரலாறு. இறைவனது இத்தகைய கருணைத் திறத்தை விளக்கவே திருஞான
சம்பந்தரும், திருநாவுக்கரையரும் பதிகந்தோறும் இவ்வரலாற்றைக்
குறிப்பிப்பாராயினரென்க. (5)
யாவ ராலு மகற்றரி திப்பிழை யாவர்க்குந்
தேவ ராமவ ரேதிரு வுள்ளந் திரும்பினாற்
போவ தேயிது வேதுணி பென்று புகன்றுபோய்ப்
பாவ லோர்பரன் றாணிழ லிற்பணிந் தேத்துவார். |
(இ
- ள்.) இப்பிழை யாவராலும் அகற்றரிது - இப்பெரும் பிழையை
யாவராலும் நீக்குத லரிது; யாவர்க்கும் தேவராம் அவரே - அனைவர்க்குந்
தேவராகிய அப்பெருமானே, திருஉள்ளம் திரும்பினால் - திருவுள்ளம்
இரங்குவராயின், இது போவது துணிபே என்று புகன்று - இப்பிழை நீங்குவது
உறுதியே என்று கூறி, பாவலோர் போய் பரன் தாள் நிழலில் பணிந்து
ஏத்துவார் - புலவர்கள் சென்று சோமசுந்தரக்கடவுளின் திருவடி நீழலில்
வீழ்ந்து வணங்கித் துதிப்பாராயினர்.
அகற்று,
முதனிலைத் தொழிற்பெயர்; அகற்ற என்னும் பெயரெச்சத்து
அகரந் தொக்கதுமாம். உள்ளந் திரும்புதல் - செற்றமொழிந்து இரங்குதல். (6)
திருத்த னேசர ணஞ்சர ணம்மறைச் சென்னிமேல்
நிருத்த னேசர ணஞ்சர ணந்நிறை வேதநூல்
அருத்த னேசர ணஞ்சர ணந்திரு வாலவாய்
ஒருத்த னேசர ணஞ்சர ணங்க ளுனக்குநாம். |
(இ
- ள்.) திருத்தனே நாம் உனக்குச் சரணம் சரணம் - தூயவனே
நாங்கள் உனக்கு அடைக்கலம்; மறைச் சென்னிமேல் நிருத்தனே சரணம்
சரணம் - மறைமுடியின்மேல் திருக்கூத்தாடுபவனே உனக்கு அடைக்கலம்;
நிறை வேதநூல் அருத்தனே சரணம் சரணம் - நிறைந்த மறைகளின்
பொருளாயுள்ளவனே உனக்கு அடைக்கலம்; திருவாலவாய் ஒருத்தனே
|