104திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



சரணம் சரணம் - திருவாலவாயின்கண் எழுந்தருளிய ஒப்பற்றவனே உனக்கு
அடைக்கலம்.

     அடைக்கலம் - அடைக்கலப் பொருள் என்றவாறு - தமக்கொரு
சுதந்தரமு மின்றித் தம்மை ஒப்புவிப்பது அடைக்கலம் புகலாகும். (7)

பாயு மால்விடை மேல்வரு வோய்பல் லுயிர்க்கெலாந்
தாயுந் தந்தையு மாகுநின் றண்ணளி தாமரைக்
கேயு மாதவன் போனல்ல தீய வியற்றினார்க்
காயு மின்பமுந் துன்பமு மாக்குவ தாதலால்.

     (இ - ள்.) பாயும் மால்விடை மேல் வருவோய் - பாய்ந்து செல்லும்
திருமாலாகிய இடபவூர்தியில் ஏறி (அடியார்க்கருள விரைந்து) வருபவனே,
பல் உயிர்க்கு எலாம் தாயும் தந்தையும் ஆகும் நின்தண் அளி - பல வேறு
வகைப்பட்ட உயிர்கள் யாவற்றிற்கும் அன்னையும் அத்தனுமாகும் நினது
தண்ணிய அருளே, தாமரைக்கு ஏயும் ஆதவன்போல் - தாமரை மலருக்குப்
பொருந்திய சூரியன் (மலர்தலையும் வாடுதலையுஞ் செய்தல்) போல, நல்ல
தீய இயற்றினார்க்கு - நன்மைகளையும் தீமைகளையுஞ் செய்தார்க்கு, ஆயும்
இன்பமும் துன்பமும் ஆக்குவது - ஆராயும் இன்பத்தையும் துன்பத்தையும்
செய்வது; ஆதலால் - ஆகையால்.

     மால்விடை - பெரியவிடை என்றுமாம். உயிர்க்கெலாம் தாயும்
தந்தையுமாகும் என்றமையால் உயிர்கட்கு இறைவனாலளிக்கப்படும்
துன்பங்கள் தாய் தந்தையரால் மக்களுக்கு அளிக்கப்படும் துன்பங்கள்
போலும் என்க.

"தந்தை தாய் பெற்ற தத்தம் புதல்வர்க டஞ்சொ லாற்றின்
வந்திடா விடினு றுக்கி வளாரினா லடித்துத் தீய
பந்தமு மிடுவ ரெல்லாம் பார்த்திடிற் பரிவே யாகும்
இந்தநீர் முறைமை யன்றோ வீசனார் முனிவு மென்றும்"

என்னும் சிவஞான சித்தியும் காண்க. தாமரைக்கு ஏயும் ஆதவன்போல்
என்றது ஆதவன் சன்னிதியில் தாமரை தன்னியல்பிற்கேற்ப அலர்தலும்
உலர்தலும் உடைமைபோல் நன்மை தீமை புரியும் உயிர்கள் இறைவன்
சன்னிதியில் இன்ப துன்பங்களை எய்துகின்றன என்றபடி. நல்ல தீய
இயற்றினார்க்கு இன்பமும் துன்பமும் என்றது நிரனிறை. (8)

அத்த கற்ற செருக்கினறிவழி கீரனின்
வித்த கக்கவி யைப்பழு தென்ற விதண்டையான்
மத்த கக்கண் விழித்து வெதுப்பின் மலர்ந்தபொன்
முத்த கக்கம லத்திடை வீழ முடுக்கினாய்.

     (இ - ள்.) அத்த - இறைவனே, கற்ற செருக்கின் - கற்றுணர்ந்த
இறுமாப்பினால், அறிவு அழி கீரன் - உணர்வழிந்த கீரன், நின் வித்தகக்
கவியை - நினது சதுரப்பாடுடைய எழுத்தை, பழுது என்ற விதண்டையால்