- குற்றமென்ற விதண்டையினாலே,
மத்தகக் கண் விழித்து - நெற்றிக்
கண்ணைத் திறந்து, வெதுப்பின் - அதன் வெம்மையால், முத்து அகம் -
முத்துக்களைத் தன்னிடத்துள்ள, மலர்ந்த பொன் கமலத்திடை வீழ
முடுக்கினாய் - மலர்ந்த பொற்றாமரை வாவியில் வீழுமாறு செலுத்தினாய்.
கற்ற
என்னும் பெயரெச்சம் காரணப் பொருட்டு; முற்றக் கற்றுளேன்
என்னுஞ் செருக்கால் என்பது கருத்தாகக் கொள்க. விதண்டை - வாதத்தில்
வெல்லும் வேட்கை யுடையார் தமது பக்கத்தைத் தாபித்தலின்றிப் பிறர்
பக்கத்தை இகழ்தல் மாத்திரமான கதை. (9)
இருணி
றைந்த மிடற்றடி கேளினி யிப்பிழை
கருணை செய்து பொறுத்தரு ளென்று கபிலனும்
பரண னும்முத லாகிய பாவலர் யாவருஞ்
சரண மென்று விழுந்திரந் தாரடி சாரவே. |
(இ
- ள்.) இருள் நிறைந்த மிடற்று அடிகேள் - இருள் நிரம்பிய
திருமிடற்றினை யுடைய பெரியோய், இனிக் கருணை செய்து - இனி அருள்
புரிந்து, இப்பிழை பொறுத்தருள் என்று - இக்குற்றத்தைப் பொறுக்கக்
கடவை என்று, கபிலனும் பரணனும் முதலாகிய பாவலர் யாவரும் -
கபிலனும் பரணனு முதலான புலவர் அனைவரும், சரணம் என்று அடிசார
விழுந்து - அடைக்கலமென்று திருவடியிற் பொருந்த வீழ்ந்து, இரந்தார் -
குறை யிரந்து வேண்டினர்.
பாவலர்
யாவரும் இப்பிழை பொறுத்தருள் என்று அடிசார விழுந்து
இரந்தார் என முடிக்க. (10)
[அறுசீரடி யாசிரிய
விருத்தம்] |
அக்கீர வேலை
யால மயின்றவெங் கருணை வள்ளல்
இக்கீர மழலைத் தீஞ்சொ லிறைவியோ டெழுந்து போந்து
நக்கீரன் கிடந்த செம்பொ னளினப்பூந் தடத்து ஞாங்கர்ப்
புக்கீர மதுரத் தீஞ்சொற் புலவர்தங் குழாத்து ணின்றான். |
(இ
- ள்.) அக்கீர வேலை ஆலம் அயின்ற - அந்தப் பாற்கடலிற்
றோன்றிய நஞ்சினை உண்டருளிய, எம் கருணை வள்ளல் - எமது அருள்
வள்ளலாகிய இறைவர், இக்கு ஈர் அம்மழலைத் தீஞ்சொல் - கரும்பின்
சுவையினை வென்ற அழகிய மழலை யாகிய இனிய சொல்லை யுடைய,
இறைவியோடு எழுந்து போந்து - உமைப் பிராட்டியோடு எழுந்து வந்தருளி,
நக்கீரன் கிடந்த செம்பொன் நளினப் பூந் தடத்து ஞாங்கர் - நக்கீரன்
அழுந்திக் கிடந்த சிவந்த பொற்றாமரை மலர்களை யுடைய வாவியினருகு,
புக்கு - அடைந்து, ஈரம் மதுரத்தீஞ்சொல் புலவர்தம் குழாத்துள் நின்றான் -
அன்புச் சுவைகனிந்த இனிய சொல்லை யுடைய புலவர் கூட்டத்துள்
நின்றான்.
|