அகரச்சுட்டு
உயர்வு குறித்தது, கீரம் - க்ஷீரம் என்பதன் சிதைவு.
நக்கீரன் என்பதில் நகரம் சிறப்புப் பொருளுணர்த்தும் இடைச்சொல்.
"குலநினையல் நம்பி" என்னும் சிந்தாமணிச் செய்யுளுரையில் 'நப்பின்னை'
என்பதனை விளக்குழி நச்சினார்க்கினியர் இங்ஙனம் கூறுதல் காண்க. (11)
அனற்கணா
னோக்கி னான்பின் னருட்கணா னோக்க வாழ்ந்த
புனற்கணே கிடந்த கீரன் பொறிபுலன் கரணமெல்லாங்
கனற்கணார் தமவே யாகக் கருணைமா கடலி லாழ்ந்து
வினைக்கணே யெடுத்த யாக்கை வேறிலன் புருவமானான். |
(இ
- ள்.) அனல் கணால் நோக்கினான் - முன் அழற் கண்ணால்
நோக்கிய இறைவன், பின் அருள் கண்ணால் நோக்க - பின் அருள்
விழியால் நோக்கி யருள, ஆழ்ந்த புனற்கணே கிடந்த கீரன் - ஆழமாகிய
நீரின் கண்ணே கிடந்த நக்கீரன், பொறிபுலன் கரணம்எல்லாம் - பொறியும்
புலனும் கரணமுமாகிய அனைத்தும், கனல் கணார்தமவேயாக -
நெற்றிக்கண்ணினை யுடைய அவ்விறைவருடையவேயாக, கருணைமாகடலில்
ஆழ்ந்து - அருளென்னும் பெரிய கடலில் அழுந்தி, வினைக்கணே எடுத்த
யாக்கை - வினையினா லெடுத்த உடல், வேறு இல் அன்பு உருவம்
ஆனான் - அழிதலில்லாத அன்பு வடிவமானான்.
அனற்
கண்ணால் நோக்கப் பொற்றாமரை வாவியில் அழுந்திக்
கிடந்தமை போல அருட்கண்ணால் நோக்கக் கருணைக் கடலில்
ஆழ்ந்தனன் என்றார். பொறி புலன் கரணமெல்லாம் இறைவருடைய
வாதலாவது அளத்திற்பட்ட புற்போலப் பசு கரணமெல்லாம் பதிகரணமாதல்.
தம, பலவின்பாற் குறிப்பு முற்று; தாம் பகுதி. வினைக்கணே, வேற்றுமை
மயக்கம்.
"திங்கள்சேர் சடையார் தம்மைச்
சென்றவர் காணா முன்னே
அங்கணர் கருணைகூர்ந்த வருட்டிரு நோக்க மெய்திற்
றங்கிய பவத்தின் முன்னைச் சார்புவிட்டகல நீங்கிப்
பொங்கிய வொளியி னீழற் பொருவிலன் புருவ மானார்" |
எனக் கண்ணப்பர்
செய்தி கூறும் பெரிய புராணச் செய்யுள் இங்கு நோக்கற்
பாலது. (12)
போதையா
ருலக மீன்ற புனிதையார் பரஞானப்பூங்
கோதையார் குழற்குத் தீங்கு கூறிய கொடிய நாவின்
றீதையார் பொறுப்ப ரேயோ* வவரன்றித் திருக்கா ளத்திக்
காதையார் குழையி னாரைக் காளத்தி கயிலையென்னா. |
(இ
- ள்.) போதையார் - ஞானவடிவினரும், உலகம் ஈன்ற
புனிதையார் - உலகத்தைப்பெற்ற தூய்மையுடையாருமாகிய, பரஞானப்
பூங்கோதையார் குழற்கு - சிறந்த ஞானப்பூங்கோதையாரின் கூந்தலுக்கு
தீங்குகூறிய கொடிய
பா
- ம். * பொறுப்பாரேயோ.
|