கீரனைக் கரையேற்றிய படலம்107



நாவின் தீதை - பழுது சொன்ன கொடிய நாவின் குற்றத்தை, அவர் அன்றிப்
பொறுப்பரேயோ - அவ்விறைவர் பொறுப்பாரே அல்லாமல் வேறொருவர்
பொறுப்பரோ, திருக்காளத்தி காது ஆர் குழையினாரை - திருக்காளத்தியில்
எழுந்தருளிய காதிற் பொருந்திய குழையினையுடைய அவ்விறைவரை,
காளத்தி கயிலை என்னா - காளத்தி கயிலை என்று.

போதை - போதமுடையாள்; போதம் - ஞானம்;
"போதையார் பொற்கிண்ணத் தடிசில்"

என்பது ஆளுடைய பிள்ளையார் திருவாக்கு. அபரஞானமன்றென்பார்
'பர ஞானம்' என்றார். அவரன்றிப் பொறுப்பார்யாரென அவரது
கருணைத்திறத்தை நினைந்து என விரித்துரைத்துக்கொள்க. காதைஆர் -
காதிற்பொருந்திய. கைலைகாளத்தி யென்பது செய்யுளாதலின்
மாறிநின்றது. (13)

எடுத்தசொன் மாறிமாறி யிசையநே ரிசைவெண் பாவாற்
றொடுத்தவந் தாதி சாத்தத் துணைச்செவி மடுத்து நேர்வந்
தடுத்தவன் கையைப் பற்றி யகன்கரை யேற்றினார் தாள்
கொடுத்தெழு பிறவி வேலைக் கொடுங்கரை யேற்ற வல்லார்.

     (இ - ள்.) எடுத்த சொல் மாறி மாறி இசைய - எடுத்த சொல் மாறி
மாறி வந்து பொருந்த, நேரிசை வெண்பாவால் தொடுத்த அந்தாதி சாத்த -
நேரிசை வெண்பாவால் தொடுத்த (கைலை பாதி காளத்தி பாதிஎன்னும்)
அந்தாதி மாலையைச்சாத்த, தாள்கொடுத்து - (அடியார்கட்குத்)
திருவடியாகிய புணையை அருளி, எழுபிறவிக் கொடும் வேலை - எழுவகைப்
பிறவியாகிய கொடிய கடலினின்றும் கரை ஏற்றவல்லார் - வீடு என்னுங்
கரையில் ஏற்றவல்ல அவ்விறைவர். துணைச்செவி மடுத்து நேர்வந்து
(அவ்வந்தாதியை) இரண்டு செவிகளாலுங் கேட்டு நேரே வந்து, அடுத்து
அவன் கையைப்பற்றி அகன்கரை ஏற்றினார் - நெருங்கி அந்தக் கீரன்
கையைப்பிடித்து அகன்ற கரையின்கண் ஏற்றியருளினர்.

     எடுத்த சொல் மாறி மாறியிசைய என்றது ஒரு பாட்டில் கைலையும்,
அடுத்த பாட்டிற் காளத்தியும் மாறி மாறி அமைய என்றவாறு.

"சொல்லும் பொருளுமே தூத்திரியும் நெய்யுமா
நல்லிடிஞ்சி லென்னுடைய நாவாகச் - சொல்லரிய
வெண்பா விளக்கா வியன்கயிலை மேலிருந்த
பெண்பாகர்க் கேற்றினேன் பெற்று"

"பெற்ற பயனிதுவே யன்றே பிறந்தியான்
கற்றவர்க ளேத்துஞ்சீர்க் காளத்திக் - கொற்றவர்க்குத்
தோளாகத் தாடரவஞ் சூழ்ந்தணிந்த வம்மானுக்
காளாகப் பெற்றே னடைந்து"