என்பன காண்க. நேரிசைவெண்பா
- வெண்பாவின் பொதுவிலக்கண
முடைத்தாய், நான்கடி யுள்ளதாய், நான்கடியும் ஓரெதுகையான ஒரு
விகற்பத்தாலேனும், முன்னிரண்டடியும் ஓரெதுகையும் பின்னிரண்டடியும்
மற்றொரெதுகையுமான இருவிகற்பத்தாலேனும் இரண்டாமடி இறுதிச்சீர்தனிச்
சீராகப்பெற்று வருவது, தாளைக்கொடுத்து கடலினின்றும் கரையேற்றவல்லார்
கையைப்பற்றிப் பொய்கையினின்றும் கரையேற்றினார் என்னும் நயம்
சிந்தித்தற்குரியது. (14)
கைதந்து
கரையே றிட்ட கருணையங் கடலைத் தாழ்ந்து
மைதந்த கயற்க ணாளை வந்தித்துத் தீங்கு நன்கு
செய்தந்தோர்க் கிகலு மன்புஞ் செய்தமை பொருளாச் செய்யுட்
பெய்தந்து பாடு கின்றான் பிரானருள் நாடு கின்றான். |
(இ
- ள்.) கைதந்து கரை ஏறிட்ட கருணை அம் கடலைத் தாழ்ந்து -
கை கொடுத்துக் கரையேற்றிய அழகிய கருணைக்கடலாகிய சோமசுந்தரக்
கடவுளை வணங்கி, மைதந்த கயல்கணாளை வந்தித்து - மையெழுதிய
கயல்போலுங் கண்களையுடைய அங்கயற்கண்ணம்மையையும் வணங்கி, தீங்கு
நன்கு. செய்தந்தோர்க்கு - தீமையும் நன்மையும் புரிந்தவர்க்கு, இகலும்
அன்பும் செய்தமை பொருளா - சினத்தையும் அருளையும் செய்தமையே
பொருளாக, செய்யுள் பெய்தந்து - செய்யுளிலமைத்து, பிரான் அருள்
நாடுகின்றான் - இறைவன் திருவருளை நாடும் நக்கீரன், பாடுகின்றான் -
பாடுவானாயினன்.
ஏற்றிட்ட
என்பது ஏறிட்ட என விகாரமாயிற்று. செய்தந்தோர் -
செய்தோர்; பெய்தந்து - பெய்து; தா, துணைவினைப்பகுதி. இகலும் அன்பும்
- கோபமும் பிரசாதமும், தீங்கு செய்தோர்க்கு இகலும், நன்கு செய்தோர்க்கு
அன்பும் என நிரனிறையாகக் கொள்க. நாடுகின்றான், பெயர். (15)
அறனிலா னிழைத்த
வேள்வி யழித்தபே ராண்மை போற்றி
மறனிலாச் சண்டிக் கீந்த மாண்பெருங் கருணை போற்றி
கறுவிவீழ் கூற்றைக் காய்ந்த கனைகழற் கமலம் போற்றி
சிறுவனுக் கழியா வாழ்நா ளளித்தருள் செய்தி போற்றி. |
(இ
- ள்.) அறன் இலான் இழைத்த வேள்வி - அறம் சற்றுமில்லாத
தக்கன் செய்த வேள்வியை, அழித்த பேர் ஆண்மை போற்றி - அழித்த
பெரிய ஆண்மை (அடியேனைக்) காக்க, மறன் இலாச் சண்டிக்கு - பாவஞ்
சற்றுமில்லாத சண்டீசருக்கு, ஈந்த மாண் பெருங்கருணை போற்றி -
அளித்தருளிய மாட்சிமை பொருந்திய பெரிய கருணைகாக்க; கறுவிவீழ்
கூற்றைக் காய்ந்த - சினந்து (மாணியின் மேல்) வீழ்ந்த கூற்றுவனை
உதைத்தருளிய, கனைகழல் கமலம் போற்றி - ஒலிக்கின்ற வீரக்கழலணிந்த
தாமரைமலர்போன்ற திருவடிகாக்க; சிறுவனுக்கு அழியா வாழ்நாள் -
அச்சிறுவனாகிய மார்க்கண்டனுக்கு அழிவில்லாத ஆயுளை, அளித்தருள்
செய்தி போற்றி - அளித்தருளிய செய்திகாக்க.
|