எடுத்து வைத்ததாகும்
என்று கண்டோர் கருதும் வண்ணம், மஞ்சுசூழ்
இஞ்சி வகுத்தனன் - முகில் சூழ்ந்த மதில்கட்டி முடித்தனன்.
சினகரம்
- அருகன் கோட்டம்; இது பின் எல்லாக் கடவுள
ராலயங்களையும் குறிப்பதாயிற்று. பைத்த - படத்தையுடைய; பெயரடியாகப்
பிறந்த குறிப்புப் பெயரெச்சம். ஆலவாய் - பாம்பு; ஆலத்தை வாயிலுடையது
எனக்காரணக் குறி. தொட்டு அகழ்ந்து என்பன ஒரு பொருளன. (24)
தென்றி சைப்பரங் குன்றமும் வடதிசை யிடபக்
குன்ற முங்குடக் கேடக நகரமுங் குணபாற்
பொன்ற லங்கிழித் தெழுபொழிற் பூவண நகரும்
என்று நாற்பெரு வாயில்கட் கெல்லையா வகுத்தான். |
(இ
- ள்.) நால் பெருவாயில்கட்கு - நான்கு பெரியவாயில்களுக்கும்,
தென் திசைப்பரங்குன்றமும் - தெற்கின்கண் திருப்பரங்குன்றமும், வடதிசை
இடபக்குன்றமும் - வடக்கின்கண் இடபமலையும், குடக்கு ஏடகநகரும் -
மேற்கின்கண் திருவேடகப்பதியும், குணபால் - கிழக்கின்கண், பொன்தலம்
கிழித்து எழுபொழில் பூவணநகரும் - தேவருலகத்தை ஊடுருவி மேலெழுந்த
சோலைகள் சூழ்ந்த திருப்பூவண நகரும், என்றும் எல்லையா வகுத்தான் -
எஞ்ஞான்றும் எல்லையாமாறு அம்மதில் வாயில்களை அமைத்தான்.
என்று
நான்கினையும் என வருவித் துரைத்தலுமாம். (25)
அனைய நீண்மதி லாலவாய் மதிலென வறைவர்
நனைய வார்பொழி னகரமு மாலவாய் நாமம்
புனைய லாயதெப் போதுமப் பொன்னகர் தன்னைக்
கனைய வார்கழற் காலினான் பண்டுபோற் கண்டான். |
(இ
- ள்.) அனைய நீள்மதில் ஆலவாய் மதிலென அறைவர் -
அந்த நீண்ட மதிலை ஆலவாய் மதில் என்று கூறுவர்; நனைய வார்பொழில்
நகரமும் - தேனையுடைய நெடிய சோலை சூழ்ந்த அந்த நகரமும்,
எப்போதும் ஆலவாய் நாமம் புனையலாயது - எஞ்ஞான்றும் ஆலவா
யென்னும் பெயரைப் பெறுவதாயிற்று; அப்பொன் நகர்தன்னை - அந்த
அழகிய நகரத்தை, கனைய வார்கழல் காலினான் - ஒலித்தலை யுடைய
நெடிய வீரக்கழலையணிந்த காலையுடைய அப்பாண்டியன், பண்டுபோல்
கண்டான் - முன்போல் ஆக்கினன்.
நனைய,
கனைய என்பன குறிப்புவினைப்பெயரெச்சம்; கனைய
என்பதில் அகரம் அசையுமாம். (26)
|