செலுத்திய மாவலி
யென்பானை வாமனன் என்னும் குறளுருவாகத் தோன்றிச்
சென்று மூன்றடிமண் இரந்து வளர்ந்து ஈரடியால் நிலத்தையும் வானத்தையும்
அளந்து மூன்றாமடியைத் தலைமீது வைத்துப் பாதலத்தில் அழுத்தியும்,
பாற்கடல் கடையுங்கால் அமிழ்ந்த மந்தரமலையை ஆமையுருக்கொண்டு
தாங்கியும் உலகிற்கு நலம்புரிந்து, பின் அவ்வச் செயலின் முடிவிலே
தருக்குற்று உலகிற்கு அச்சமும் இடரும் விளைத்தகாலை சிவபெருமான்
திருமாலின் அவ்வத் தோற்றங்களையும் அழிப்பித்தனர் எனப் புராணங்கள்
கூறும்.
திருக்குரங்கணில்
முட்டம், குரங்காடுதுறை முதலிய திருப்பதிகளில்
குரங்கும்; திருநாகேச்சுரம், சீகாளத்தி முதலிய திருப்பதிகளில் பாம்பும்;
திருவெறும்பூச்சரத்தில் எறும்பும்; திருக்கழுக்குன்றம், திருப்புள்ளிருக்கு
வேளூர் முதலியவற்றில் கழுகும்; பூசித்துப் பேறு பெற்றன. நாரையும்,
கரிக்குருவியும் மதுரையிற் பேறுபெற்ற செய்திகள் இப்புராணத்துள் முன்
ஓதப்பட்டன. கோழி காசியில் முத்தியடைந்தமையும் முன் கூறப்பட்டது.
அலவனும் தேரையும் பேறு பெற்றமை வந்தவழிக் காண்க. ஆற்றூர் என்னுந்
திருப்பதியிலே சிவதீர்த்தத்தில் இருந்த ஓர் தவளை சிவனிராவில் ஓர்
பாம்பால் விழுங்கப்பட்டு உயிர்விடும் அமையத்தில் உமையால்
திருவைந்தெழுத்து உபதேசிக்கப் பெற்றுச் சிவசாரூபம் பெற்றதென ஆற்றூர்ப்
புராணம் கூறுவதனைத் தேரை அருள் பெற்றமைக்குக் கொள்ளலுமாம். நண்டு
கற்கடகேச்சுரத்தில் முத்திபெற்றதென்றும் கூறுப. (21)
சாலநா னிழைத்த தீங்குக் கென்னையுந் தண்டஞ் செய்த
கோலமே போற்றி பொல்லாக் கொடியனேன்* றொடுத்த புன்சொன்
மாலைகேட் டென்னை யாண்ட மலைமகண் மணாள போற்றி
ஆலவா யடிகள் போற்றி யம்மைநின் னடிகள் போற்றி.
|
(இ
- ள்.) நான் சால இழைத்த தீங்குக்கு - நான் மிகவும் செய்த
குற்றத்திற்கு, என்னையும் தண்டம் செய்த கோலமே போற்றி -
அடியேனையும் ஒறுத்தருளிய திருவுருவே வணக்கம்; பொல்லாக்
கொடியனேன் - பொல்லாத கொடியவனாகிய யான், தொடுத்த புன்சொல்
மாலை கேட்டு - தொடுத்த புல்லிய சொல்மாலையைக் கேட்டு; என்னை
ஆண்ட மலைமகள் மணாள போற்றி - அடியேனை ஆண்டருளிய
மலைமகளின் மணாளனே வணக்கம்; ஆலவாய் அடிகள் போற்றி - திருவால
வாயில் எழுந்தருளிய பெருமானே வணக்கம்; அம்மைநின் அடிகள்போற்றி -
பிராட்டியே நின் திருவடிகட்கு வணக்கம்.
இப்பாட்டிலே
தனக்குச்செய்த இகலும் அன்பும் கூறப்பட்டன. போற்றி
என்னுஞ் சொல் வணக்கம் எனவும் காக்க எனவும் பொருள்படும். ஆகையால்
இச்செய்யுட்களில் இவ்விரு பொருளும் கூறப்பட்டன. (22)
(பா
- ம்.) * போற்றியஞ்சிக் கொடியனேன்.
|