கலிநிலைத்துறை
|
ஆவலந்தனே
னடியனேற் கருளரு ளென்னாக்
கோவ மும்பிர சாதமுங் குறித்துரை பனுவற்
பாவ லங்கலாற் பரனையும் பங்கிலங் கயற்கட்
பூவை தன்னையு முறைமுறை போற்றியென் றேத்தா*. |
(இ
- ள்.) ஆ - ஐயோ, அலந்தனேன் - வருந்தினேன், அடியனேற்கு
அருள் அருள் என்னா - அடியேனுக்கு அருளாய் அருளாய் என்று வேண்டி,
கோவமும் பிரசாதமும் குறித்து உரை - இறைவனுடைய வெகுளியையும்
அருளையும் குறித்துக் கூறும், பனுவல் பா அலங்கலால் - நூலாகிய
பாமாலையால், பரனையும் - சோமசுந்தரக் கடவுளையும், பங்கில்
அங்கயற்கண் பூவை தன்னையும் - அவன் பாகத்திலமர்ந்த அங்கயற்கண்
ணம்மையையும், முறை முறை போற்றி என்று ஏத்தா - முறையாகப் போற்றி
என்று துதித்து.
ஆ,
இரக்கப்பொருள் குறித்த இடைச்சொல். பனுவல் - கோபப்
பிரசாதம் என்னும் பிரபந்தம்; அது,
"தவறு பெரிதுடைத்தே தவறு பெரிதுடைத்தே
வெண்டிரைக் கருங்கடன் மேற்றுயில் கொள்ளும்
அண்ட வாணனுக் காழியன் றருளியும்
உலக மூன்று மொருங்குடன் படைத்த
மலரோன் றன்னை வான்சிர மரிந்துங்
கான வேடுவன் கண்பரிந் தப்ப
வான நாடு மற்றவற் கருளியுங்
கடிபடு பூங்கணைக் காம னாருடல்
பொடிபட விழித்தும் பூதலத் திசைந்த
மானுட னாகிய சண்டியை
வானவ னாக்கியும்..........." என்பது. (23) |
தேவ தேவனைப் பின்பெருந் தேவிபா ணியொடுந்
தாவி லேழிசை யேழுகூற் றிருக்கையுஞ் சாத்திப்
பூவர் சேவடி சென்னிமேற் பூப்பவீழ்ந் தெழுந்தான்
பாவ லோர்களுந் தனித்தனி துதித்தனர் பணிந்தார். |
(இ
- ள்.) பின் தேவதேவனைப் பெருந் தேவபாணியொடும் - பின்பு
தேவ தேவனாகிய அவ்விறைவனுக்குப் பெருந் தேவபாணியுடன், தாஇல்
ஏழ்இசை ஏழு கூற்றிருக்கையும் சாத்தி - கெடுதலில்லாத ஏழிசை யமைந்த
திருவெழு கூற்றிருக்கையும் சாத்தி, பூவர் சேவடி சென்னிமேல் பூப்ப -
மலர்போன்ற சிவந்த திருவடிகள் தனது முடியின்மேல் மலருமாறு, வீழ்ந்து
எழுந்தான் - விழுந்து வணங்கி எழுந்தனன்; பாவலோர்களும் தனித்தனி
(பா
- ம்.) * போற்றிநின் றேத்தா.
|