கொடிக ணீண்மதின் மண்டபங் கோபுரம் வீதி
கடிகொள்*பூம்பொழி லின்னவும் புதியவாக் கண்டு
நெடிய கோளகை கிரீடம்வா ணிழன்மணி யாற்செய்
தடிகள் சாத்திய கலன்களும் வேறுவே றமைத்தான். |
(இ
- ள்.) கொடிகள் நீள்மதில் மண்டபம் - கொடிகள் கட்டிய
நீண்ட திருமதிலும் திருமண்டபமும், கோபுரம் வீதி - திருக்கோபுரமும்
திருவீதியும், கடிகொள் பூம்பொழில் இன்னவும் - மணமிக்க பூக்களையுடைய
சோலைகளும் இவைபோன்ற பிறவும், புதியவாக் கண்டு - புதியனவாகச்
செய்து, அடிகள் சாத்திய - சோமசுந்தரக்கடவுள் அணியும்படி, நெடிய
கோளகை கிரீடம் - நீண்ட கவசமும் முடியும், வாள்நிழல் மணியால் செய்து
- விளங்கும் ஒளியையுடைய மணிகளாற் செய்து, வேறுவேறு கலன்களும்
அமைத்தான் - இன்னும் வேறுவேறு அணிகளும் செய்தனன்.
கோளகை
- கவசத்தை உணர்த்திற்று. சாத்திய - அணியும்படி;
செய்யிய வென்னும் வினையெச்சம்; பெயரெச்சமாகக்கொண்டு, சாத்திய
கோளகை கிரீடம் கலன்களும் மணியாற்செய்து அமைத்தான்
என்றுரைத்தலுமாம். (27)
பல்வ கைப்பெருங் குடிகளின் பரப்பெலா நிரப்பிச்
செல்வ வானவன்+புரந்தரன் புரத்தினுஞ் சிறப்ப
மல்லன் மாநகர் பெருவளந் துளும்பிட வளர்த்தான்
தொல்லை நாட்குல சேகரன் போல்வரு தோன்றல். |
(இ
- ள்.) பல்வகைப் பெருங்குடிகளின் பரப்பு எலாம் நிரப்பி -
பலவகைப்பட்ட சிறந்த குடிகளின் பரப்பு அனைத்தையுங் குடியேற்றி,
செல்வவானவன் புரந்தரன் புரத்தினும் சிறப்ப - செல்வமிக்க குபேரனும்
இந்திரனுமாகிய இவர்கள் நகரத்தினுஞ்சிறந்தோங்க, மல்லல் மாநகர்
பெருவளம் துளும்பிட - வளமிக்க பெரிய அந்நகரின்கண் பெரிய
செல்வங்கள் நிறைய, தொல்லைநாள் குலசேகரன் போல்வரு தோன்றல்
வளர்த்தான் - முன்னாளில் விளங்கிய குலசேகர பாண்டியனைப்போல
வந்த வங்கியசேகரபாண்டியன் வளர்த்தான்.
வானவனாகிய
புரந்தரன் என்றுமாம். குலசேகரன் பண்டு திருநகரங்
கண்டானாகலின் குலசேகரன்போல் வருதோன்றல் என்றார்; இருபெயரும்
ஒரே பொருளவாதலும் காணற்பாலது. (28)
ஆகச்செய்யுள்
- 2349 aaa
(பா
- ம்.) * கொடிகொள். +வானவர்.
|