122திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



பைத்தலை புரட்டு முந்நீர்ப் பௌவமுண் டவனே யெம்மை
ஒத்தவ னனையான் வாழ்க்கைக் குரியளா கியவு லோபா
முத்திரை யிமவான் பெற்ற முகிழ்முலைக் கொடியொப் பாளென்
றத்திரு முனியை நோக்கி யாயிடை விடுத்தா யன்றே.

     (இ - ள்.) பைத்து அலைபுரட்டும் முந்நீர்ப் பௌவம் உண்டவனே -
பரந்து அலைவீசும் மூன்று நீரினையுடைய கடலைக்குடித்த குறுமுனிவனே,
எம்மை ஒத்தவன் - எம்மை ஒப்பான், அனையான் வாழ்க்கைக்கு
உரியளாகிய உலோபா முத்திரை - அம்முனிவன் இல்வாழ்க்கைக்கு
உரியவளாகிய உலோபா முத்திரை என்பாளே; இமவான்பெற்ற முகிழ்
முலைக்கொடி ஒப்பாள் என்று - மலையரையன்பெற்ற அரும்பிய
கொங்கையையுடைய கொடிபோன்ற உமையை ஒத்தவள் என்று கூறி,
அத்திருமுனியை நோக்கி - அந்தத் திருமுனிவனைப் பார்த்து, ஆயிடை
விடுத்தாய் - அங்குப் போகுமாறு பணித்தனை.

     பைத்து - விரிந்தென்னும் பொருட்டு. அன்று ஏ அசை. (10)

விடைகொடு போவா னொன்றை வேண்டினா னேகுந் தேயந்
தொடைபெறு தமிழ்நா டென்று சொல்லுப வந்த நாட்டின்
இடைபயின் மனித்த ரெல்லா மின்றமி ழாய்ந்து கேள்வி
உடையவ ரென்ப கேட்டார்க் குத்தர முரைத்தல் வேண்டும்.

     (இ - ள்.) விடைகொடு போவான் - விடைபெற்றுப் போகும்
அம்முனிவன், ஒன்றை வேண்டினான் - ஒன்றை வேண்டுவானாயினன்;
ஏகும்தேயம் - யான் செல்லும் நாடு, தொடைபெறு தமிழ்நாடு என்று
சொல்லுப - (செய்யுளாகத்) தொடுத்தலைப்பெறும் தமிழ்நாடு என்று கூறுவர்;
அந்த நாட்டின் இடைபயில் மனித்தர் எல்லாம் - அந்த நாட்டின் கண்
வாழும் மக்களனைவரும், இன்தமிழ் ஆய்ந்து கேள்வி உடையவர் என்ப -
இனிய தமிழை ஆராய்ந்து அந் நூற்கேள்வி மிக்கவரென்று கூறுவர்;
கேட்டார்க்கு உத்தரம் உரைத்தல் வேண்டும் - (ஆதலால் அத்தமிழ் நூலில்)
வினாவினார்க்கு விடைகூறுதல் வேண்டும்.

     தொடை - செய்யுளுறுப்புக்களுள் ஒன்று; அது மோனை, எதுகை,
முரண், இயைபு, அளபெடை, பொழிப்பு, ஒரூஉ, செந்தொடை, நிரனிறை,
இரட்டை என்னும் விகற்பங்களுடையது. (11)

சித்தமா சகல வந்தச் செந்தமி ழியனூ றன்னை
அத்தனே யருளிச் செய்தி யென்றன னனையான் றேற
வைத்தனை முதனூ றன்னை மற்றது தெளிந்த பின்னும்
நித்தனே யடியே னென்று நின்னடி காண்பே னென்றான்.

     (இ - ள்.) சித்தம் மாசு அகல - மனத்திலுள்ள அறியாமையாகிய
குற்றம் நீங்க, அந்தச் செந்தமிழ் இயல்நூல் தன்னை - அச்செந்தமிழின்
இலக்கண நூலை அத்தனே அருளிச் செய்தி என்றனன் - இறைவனே