அருளிச் செய்வாயாக
என்று வேண்டினன்; அனையான் தேற முதனூல்
தன்னை வைத்தனை - அம்முனிவன் தெளியுமாறு முதனூல் அருளினை;
அது தெளிந்த பின்னும் - அம் முதல்நூலைத் தேர்ந்துணர்ந்த பின்னும்,
நித்தனே - அழிவில்லாதவனே, அடியேன் நின் அடி என்று காண்பேன்
என்றான் - அடியேன் நினது திருவடியை என்று காண்பேன் என்று
வினவினன். மற்று, அசை. (12)
கடம்பமா
வனத்தி லெம்மைக் கண்டனை யிறைஞ்சி யுள்ளத்
திடம்பெற யாது வேட்டா யவையெலா மெம்பாற் பெற்றுத்
திடம்பெற மலயத் தெய்தி யிருக்கென விடுத்தாய் சென்று
குடம்பெறு முனியு மங்கே யிருக்கின்றான் கொடியி னோடும். |
(இ
- ள்.) மாகடம்பவனத்தில் - பெரிய கடம்பவனத்தின்கண்,
எம்மைக் கண்டனை இறைஞ்சி - எம்மைக் கண்டு வணங்கி, உள்ளத்து இடம்
பெற யாது வேட்டாய் - நின் உள்ளத்தின்கண் நிரம்ப யாதனை யாதனை
விரும்பினாயோ, அவை எலாம் எம்பால் பெற்று - அவற்றை எல்லாம்
எம்மிடத்துப் பெற்று, திடம்பெற மலயத்து எய்தி இருக்க எனவிடுத்தாய் -
மனஞ்சலியாது பொதியின் மலையிற் சென்று இருக்கக்கடவை என்று
ஏவினாய்; குடம்பெறு முனியும் அங்கே சென்று - கலசமுனியாகிய அவனும்
அங்குச் சென்று, கொடியினோடும் இருக்கின்றான், உலோபா
முத்திரையோடும் இருக்கின்றான்.
கண்டனை,
முற்றெச்சம். அவையெனப் பின் வருதலின் யாது
என்பதனை அடுக்கிக் கொள்க; ஒருமையும் பன்மையும் மயங்கின
வென்றுமாம். இருக்கென அகரம் தொக்கது. (13)
இனையதுன் றிருவுள் ளத்துக் கிசைந்ததே லிவற்குக் கேள்வி
அனையமா தவனைக் கூவி யுணர்த்தென வணங்கு கூற
இனையநா ணிகழ்ச்சி* யெல்லா மறந்திடா தின்று சொன்னாய்
அனையதே செய்து மென்னா வறிவனை நினைந்தா னையன்.
|
(இ
- ள்.) இனையது உன் திருவுள்ளத்திற்கு இசைந்ததேல் -
இச்செய்தி நினது திருவுள்ளத்துக்குப் பொருந்துவதாயின், அனைய
மாதவனைக் கூவி - அம்முனிவனை அழைத்து, இவற்குக் கேள்வி உணர்த்து
என அணங்குகூற - இந்நக்கீரனுக்குத் தமிழிலக்கணத்தை அறிவுறுத்துவாயாக
என்று இறைவிகூற, இனையநாள் நிகழ்ச்சி எல்லாம் - இத்துணை
நாட்செய்திகளனைத்தையும், மறந்திடாது இன்று சொன்னாய் மறந்திடாது
இன்று கூறினை, அனையதே செய்தும் என்னா - அதனையே செய்வே
மென்று கூறி, ஐயன் அறிவனை நினைந்தான் - இறைவன் அம்முனிவனை
நினைந்தனன்.
கூவி
அவனால் உணர்த்து எனவிரிக்க. பாலினேர் மொழியாளாகிய
அணங்கு என இயைக்க. சொன்னாயென வியந்து என்க. (14)
(பா
- ம்.) * எனைய நாணிகழ்ச்சி.
|