உடைய நாயகன் றிருவுள முணர்ந்தனன் முடிமேல்
அடைய வஞ்சலி முகிழ்த்தன னருந்தவ விமானத்
திடைபு குந்தனன் பன்னியோ டெழுந்தன னகல்வான்
நடைய னாகிவந் தடைந்தன னற்றமிழ் முனிவன். |
(இ
- ள்.) உடைய நாயகன் திருவுளம் உணர்ந்தனன் -
எல்லாமுடைய இறைவனது திருவுள்ளக் குறிப்பினை அறிந்து, முடிமேல்
அடைய அஞ்சலி முகிழ்த்தனன் - முடிமீது பொருந்த அஞ்சலியாகக்
கைகளைக் குவித்து, அருந்தவ விமானத்திடை பன்னியோடு புகுந்தனன் -
அரியதவமாகிய விமானத்தில் மனைவியோடும் ஏறி, எழுந்தனன் - மேலே
எழுந்து, அகல்வான் நடையன் ஆகிவந்து - அகன்ற வானை வழியாகக்
கொண்டு நடப்பவனாய், நல்தமிழ் முனிவன் அடைந்தனன் - நல்ல தமிழ்
முனிவன் மதுரையை அடைந்தான்.
வானிலே
செல்லும் தவ ஆற்றலை விமானமாக உருவகித்தார்.
உணர்ந்தனன், முகிழ்த்தனன், புகுந்தனன், எழுந்தனன் என்பன
முற்றெச்சங்கள். (15)
இயங்கு மாதவத் தேரினும் பன்னியோ டிழிந்து
புயங்க னாலயம் புகுந்துநாற் புயம்புடை கிளைத்துத்
தயங்கு செம்பவ ளாசலந் தன்னையு மதன்பால்
வயங்கு மிந்திர நீலமால் வரையையும் பணியா.
|
(இ
- ள்.) இயங்கும் மாதவத்தேரினும் - இயங்குதலையுடைய பெரிய
தவமாகிய தேரினின்றும், பன்னியோடு இழிந்து - மனைவியோடும் இறங்கி,
புயங்கன் ஆலயம் புகுந்து - சோமசுந்தரக் கடவுளின் திருக்கோயிலுட்புகுந்து,
புடைநால்புயம் கிளைத்துத் தயங்கு - மருங்கில் நான்கு திருத்தோள்கள்
கிளைத்து விளங்கும், செம்பவள அசலம் தன்னையும் - சிவந்த பவள
மலையை ஒத்த இறைவனையும், அதன்பால் வயங்கும் இந்திர நீலமால்
வரையையும் பணியா - அதன் மருங்கில் விளங்கும் பெரிய இந்திர
நீலமலையை ஒத்த அம்மையையும் வணங்கி.
தேரினும்
- தேரினின்றும், புயங்கன் - சிவபிரான்றிருப்பெயர்;
"புயங்கனாள்வான் பொன்னடிக்கே" |
என்பது திருவாசகம்;
அரவாபரண முடையன் என்றுரைப்பாரு முளர்.
இறைவன் பவளமலையையும், இறைவன் பக்கத்துள்ள இறைவி பவளமலையின்
பாங்கர் விளங்கும் இந்திர நீலமலையையும் போன்று தோன்றினர்;
"வெள்ளி வெற்பின்மேல் மரகதக்
கொடியுடன் விளங்கும்
தெள்ளு பேரொளிப் பவளவெற் பெனவிடைப் பாகங்
கொள்ளு மாமலை யாளுடன் கூடவீற் றிருந்த
வள்ள லாரைமுன் கண்டனர் வாக்கின்மன் னவனார்" |
என்னும் பெரியபுராணச்
செய்யுள் சிந்திக்கற்பாலது. (16)
|