வெள்ளை மாமதிப் பிளவணி வேணியங் கருணை
வள்ள லார்பணி சிரத்தினு மனத்தினுந் தாங்கிப்
பள்ள மேழையும் பருகினோன் பணியுநக் கீரன்
உள்ள மாசற வியாகர ணத்தினை யுணர்த்தும்*. |
(இ
- ள்.) வெள்ளை மாமதிப் பிளவு அணி - வெண்மையாகிய
பெருமை பொருந்திய பிறைமதியை அணிந்த, வேணி அம்கருணை
வள்ளலார் பணி - சடையையுடைய அழகிய அருள்வள்ளலாகிய
சோமசுந்தரக்கடவுள் கட்டளையை, சிரத்தினும் மனத்தினும் தாங்கி -
முடிவிலும் மனத்திலும் தாங்கி, பள்ளம் ஏழையும் பருகினோன் - கடல்
ஏழையுங்குடித்த குறுமுனிவன், பணியும் நக்கீரன் உள்ளம் மாசு அற -
தன்னை வணங்கிய நக்கீரனது உள்ளத்திலுள்ள அறியாமை நீங்க,
வியாகரணத்தினை உணர்த்தும் - இலக்கணத்தை அறிவுறுத்தும்.
வியாகரணம்
- இலக்கணம். (19)
இருவ கைப்புற வுரைதழீஇ யெழுமத மொடுநாற்
பொருளொ டும்புணர்ந் தையிரு குற்றமும் போக்கி
ஒருவி லையிரண் டழகொடு முத்தியெண் ணான்கும்
மருவு மாதிநூ லினைத்தொகை வகைவிரி முறையால். |
(இ
- ள்.) இருவகைப்புறவுரை தழீஇ - பொதுவுஞ் சிறப்புமாகிய
இருவகைப் புறவுரைகளையும் முன்னர்ப்பொருந்தி, எழுவகை மதமொடு -
உடன்படல் முதலிய எழுவகை மதங்களோடும், நாற்பொருளொடும் புணர்ந்து
- அறமுதலிய நான்கு பொருளோடும்கூடி, ஐஇரு குற்றமும் போக்கி -
குன்றக்கூறல் முதலிய பத்துக் குற்றங்களையும் அகற்றி, ஒரு இல் ஐ இரண்டு
அழகொடும் - நீங்குதல் இல்லாத சுருங்கச் சொல்லல் முதலிய பத்து
அழகோடும், உத்தி எண்ணான்கும் மருவும் - முப்பத் திரண்டு உத்தியும்
பொருந்தும், ஆதிநூலினைத் தொகைவகை விரிமுறையால் - முதனூலினைத்
தொகையும் வகையும் விரியுமாகிய முறையினால்.
புறவுரை
- பாயிரம். நாற்பொருள் - அறம் பொருள் இன்பம் வீடு,
எழுவகை மதம், பத்துக் குற்றம், பத்தழகு, முப்பத்திரண்டு தந்திரவுத்தி
(நூற்புணர்ப்பு) என்பவற்றைப் பின்வருஞ் சூத்திரங்களால் முறையே அறிக.
"எழுவகை மதமே யுடம்படன் மறுத்தல்
பிறர்தம் மதமேற் கொண்டு களைவே
தாஅ னாட்டித் தனாது நிறுப்பே
இருவர் மாறுகோ ளொருதலை துணிவே
பிறர்நூற் குற்றங் காட்ட லேனைப்
பிறிதொடு படாஅன் றன்மதங் கொளலே." |
பா
- ம். * வியாகரணத்தினை யுரைக்கும்.
|