சொல்வழுக்கள்
- திணைவழு, பால்வழு, இடவழு, காலவழு; வினாவழு,
விடைவழு, மரபுவழு என எழு வகைப்படும். சொல்வழுக்கள் என்றாரேனும்
அகத்திணை வழுவும், புறத்திணை வழுவுமாகிய பொருளிலக்கண வழுக்களும்
கொள்க. வழுவமைதி என்பதும் உபலக்கணத்தாற் பெறப்படும். (26)
மறையி னந்தமுந்
தொடாததா ணிலந்தொட வந்த
நிறைப ரஞ்சுடர் நிராமய நிருத்தற்குப் பிழைத்தேன்
சிறிய கேள்வியோர் கழியவுஞ் செருக்குடை யோரென்
றறிஞர் கூறிய பழஞ்சொலென் னளவிற்றே யம்ம. |
(இ
- ள்.) மறையின் அந்தமும் தொடாத தாள் - மறை முடியும்
தீண்டு தற்கரிய திருவடிகளை, நிலம் தொட வந்த - நிலமகள் தீண்டுமாறு
நடந்து வந்த. நிறை பரஞ்சுடர் நிராமய நிருத்தற்குப் பிழைத்தேன் - எங்கும்
நிறைந்த பரஞ்சோதியாகிய பாசமற்ற கூத்தப்பிரானுக்குப் பிழை செய்தேன்
(ஆகலின்), சிறிய கேள்வியோர் - நிரம்பாத கல்வியுடையவர், கழியவும்
செருக்கு உடையோர் என்று - மிகவும் இறுமாப்புடையவராய் இருப்பர்
என்று, அறிஞர் கூறிய பழஞ்சொல் - அறிவுடையோர் கூறிய பழமொழி, என்
அளவிற்று - என் அளவினதாயது.
மறையின்
அந்தம் - வேதாந்தம்; உபநிடதம். நிராமயன் -
பாசநோயில்லாதவன்; ஆமயம் - நோய். கழிய, உரிச்சொல்லடியாக வந்த
வினையெச்சம். சிறிய கேள்வியோர் செருக்குறுவ ரென்பது,
"கரையமை கல்வி சாலாக் கவிஞர்போ
லிறுமாந்து" |
என இவ்வாசிரியராலும்
முன் குறிக்கப்பட்டது. அம்ம, இடைச்சொல். (27)
அட்ட மூர்த்திதன்
றிருவடிக் கடியனேன் பிழைக்கப்
பட்ட தீங்கினா லெனையவ னுதல்விழிப் படுதீச்
சுட்ட தன்றியென் னெஞ்சமுஞ் சுடுவதே யென்றென்
றுட்ட தும்பிய விழுமநோ யுவரியு ளாழ்ந்தான். |
(இ
- ள்.) அட்டமூர்த்தி தன் திருவடிக்கு - அட்டமூர்த்தியாகிய
இறைவன் திருவடிகட்கு, அடியனேன் பிழைக்கப்பட்ட தீங்கினால் -
அடியேன் பிழை செய்ய நேர்ந்த தீங்கினால், எனை - அடியேனை, அவன்
நுதல் விழிப்படு தீ சுட்டது அன்றி - அவ்விறைவனது நெற்றி விழியில்
உண்டாகிய நெருப்புச் சுட்டதே அல்லாமல், என் நெஞ்சமும் சுடுவதே என்று
என்று - என் உள்ளமும் என்னைச் சுடுகின்றதே என்று எண்ணி எண்ணி,
உள் ததும்பிய விழுமநோய் உவரியுள் ஆழ்ந்தான் - உள்ளே நிரம்பித்
ததும்பும் துன்பநோ யென்னுங் கடலுள் ஆழ்ந்தான்.
அட்டமூர்த்தி
- நிலம், நீர், தீ, வளி, வான், ஞாயிறு, திங்கள், உயிர்
என்னும் எட்டு வடிவாகிய இறைவன். நெஞ்சமும், இறந்தது தழுவிய
எச்சவும்மை. நெஞ்சம் சுடுதலை,
|