"ஆதியி
லான்ம தத்துவ மான வலர்மகன் பாகமும் நடுவில்
நீதியின் விச்சா தத்துவ மான நெடியவன் பாகமு முடிவில்
ஓதிய சிவதத் துவமென லான வுருத்திரன் பாகமு முதிக்கும்
பேதியிம் மூன்றி லெண்ணிறத் துவங்கள் பிறக்குமிம் மூன்றினு
முறையால்" |
என்னும் வேதத்துக்குப்
பொருளருளிச்செய்த படலச்செய்யுளாலறிக. (4)
[கலி
விருத்தம்] |
இம்மாநக
ருள்ளானொரு வணிகன்றன பதியென்
றம்மாநிதிக் கிழவோன்மனை குணசாலினி யனையார்
தம்மாதவப் பொருட்டால்வெளிற் றறிவாளரைத் தழுவும்
பொய்ம்மாசற வினன்போலவ தரித்தானொரு புத்தேள். |
(இ
- ள்.) தனபதி என்று ஒரு வணிகன் - தனபதி என்னும்
பெயருடையனாய் ஒரு வணிகன், இம்மாநகர் உள்ளான் - இப்பெரிய நகரில்
இருக்கின்றான்; அம்மாநிதிக்கிழவோன் மனை குணசாலினி - அப்பெரிய
நிதிக்கிழவன் மனைவி குண சாலினி என்பாள்; அனையார் தம்
மாதவப்பொருட்டால் - அவர்கள் செய்த பெரியதவம் காரணமாக, வெளிற்று
அறிவாளரைத் தழுவும் பொய் மாசு அற - வெள்ளறிவினரைத் தழுவிய
நிலையுதல் இல்லாத அஞ்ஞானம் ஆகிய இருள் நீங்க, இனன்போல் ஒரு
புத்தேள் அவதரித்தான் - சூரியன் தோன்றினாற்போல ஒப்பற்ற
முருகக்கடவுள் அவதரித்தான்.
வெளிற்றறிவு
- புல்லறிவு. இனன் - சூரியன். புத்தேள் - தெய்வம்;
முருகக்கடவுள் என்பதை இப்புராணத்து வலைவீசிய படலத்திலும்,
இறையனாரகப் பொருள் உரைப்பாயிரத்திலும் காண்க. இதனை ஐஞ்சீராகப்
பிரித்துக் கலிநிலைத்துறையாக்கலாம் எனினும் அதற்கு ஓசை
யின்பமின்மையின் கலிவிருத்தம் எனலே பொருத்தமென்க. (5)
ஓயாவிறன் மதனுக்கிணை யொப்பானவ னூமச்
சேயாமவ னிடைநீருரை செய்யுட்கவி யெல்லாம்
போயாடுமி னனையானது புந்திக்கிசைந் தானன்
றாயாவரு மதிக்குந்தமி ழதுவேயென வறைந்தான். |
(இ
- ள்.) ஓயாவிறல் மதனுக்கு இணை ஒப்பானவன் - அவன்
இடையீடு படாத வெற்றியையுடைய மதவேளுக்கு இணையொத்தவன்;
ஊமச்சேயாம் அவனிடைபோய் - மூங்கைப் பிள்ளையாகிய அவனிடத்துச்
சென்று. நீர் உரை செய்யுள் கவி எல்லாம் ஆடுமின் - நீவிர் பாடிய கவிகள்
அனைத்தையுங் கூறுங்கள்; அனையானது புந்திக்கு இசைந்தால் - அவனது
உள்ளத்திற்குப் பொருந்துமேல். யாவரும் நன்றாய் மதிக்கும் தமிழ் அதுவே
என அறைந்தான் - அனைவரும் சிறப்பாகக் கருதிப்பாராட்டும் கவி
அதுவேயாகும் என்று கூறியருளினான்.
|