(இ
- ள்.) பின் - பின்பு, பாவலர் எல்லாம் - புலவர் அனைவரும்,
பெரு வணிகக்குல மணியை அன்பால் அழைத்து ஏகி - பெரிய வணிகர்குல
சிகாமணியை அன்போடு அழைத்துச் சென்று, தமது அவையத்திடை இருத்தா
- தங்கள் கழகத்தின்கண் இருத்தி, நன்பால் மலர் நறுஞ்சாந்து கொண்டு
நயந்து அருச்சித்தனர் - நல்ல வெண்மலரும் நறிய சந்தனமுமாகிய இவற்றால்
விரும்பி அருச்சித்து, முன்பால் இருந்து - முன்னர் இருந்து, அருந்தீந்தமிழ்
மொழிந்தார் - அரிய இனிய தமிழ்க் கவிகளை மொழிந்தனர்; அவை கேளா
- அவற்றைக் கேட்டு.
பால்
மலர் - பால் போலும் வெள்ளிய மலர்; 'வெளியதுஉடீஇ
வெண்பூச் சூட்டி' என்று களவியலுரை கூறுதலுங் காண்க. அருச்சித்தனர்,
முற்றெச்சம். முன்பால் - முன்பக்கம். முன்பு ஆல் எனப் பிரித்து வேற்றுமை
மயக்க மாக்கி முன்பில் என்றுரைத்தலுமாம். (9)
மகிழ்ந்தான்சிலர் சொல்லாழ்ச்சியை மகிழ்ந்தான்சிலர் பொருளை
இகழ்ந்தான்சிலர் சொல்வைப்பினை யிகழ்ந்தான்சிலர் பொருளைப்
புகழ்ந்தான்சிலர் சொல்லின்பமும் பொருளின்பமு மொருங்கே
திகழ்ந்தான்சிலர் சொற்றிண்மையும் பொருட்டிண்மையுந் தேர்ந்தே.
|
(இ
- ள்.) சிலர் சொல் ஆழ்ச்சியை மகிழ்ந்தான் - சிலர்
சொல்லாழத்தை மகிழ்ந்தான்; சிலர் பொருளை மகிழ்ந்தான் - சிலர்
பொருளாழத்தை மகிழ்ந்தான்; சிலர் சொல் வைப்பினை இகழ்ந்தான் - சிலர்
சொல் வைத்த முறையினை இகழ்ந்தான்; சிலர் பொருளை இகழ்ந்தான் -
சிலர் பொருளமைப்பினை இகழ்ந்தான்; சிலர் சொல் இன்பமும் பொருள்
இன்பமும் ஒருங்கே புகழ்ந்தான் - சிலர் சொல்லின்பத்தையும்
பொருளின்பத்தையும் ஒரு சேரப் புகழ்ந்தான்; சிலர் சொல் திண்மையும்
பொருள் திண்மையும் தேர்ந்து திகழ்ந்தான் - சிலர் சொல்வலியையும்
பொருள் வலியையும் ஆராய்ந்தறிந்து (மகிழ்ச்சியுடன்) விளங்கினான்.
மகிழ்தல்
இகழ்தல், புகழ்தல் என்பவற்றை மெய்ப்பாட்டால்
வெளிப்படுத்தினனென்க. (10)
இத்தன்மைய னாகிக்கலை வல்லோர்தமி ழெல்லாஞ்
சித்தங்கொடு தெருட்டுஞ்சிறு வணிகன்றெருள் கீரன்
முத்தண்டமிழ் கபிலன்றமிழ் பரணன்றமிழ் மூன்றும்
அத்தன்மைய னறியுந்தொறு மறியுந்தொறு மெல்லாம். |
(இ
- ள்.) கலைவல்லோர் தமிழ் எல்லாம் சித்தம் கொடு - கலையில்
வல்ல அப்புலவர்களின் கவிகள் அனைத்தையும் உள்ளத்திற் கொண்டு,
இத்தன்மையன் ஆகிதெருட்டும் சிறுவணிகன் - (அவற்றி னியல்புகளை)
இங்ஙனம் மெய்ப்பாட்டினாலே புலப்படுத்திய சிறிய வணிகன், தெருள் கீரன்
முத்தண்தமிழ் - தெளிந்த நக்கீரனது மூன்று வகைப்பட்ட தண்ணிய தமிழும்,
கபிலன் தமிழ் பரணன் தமிழ் மூன்றும் - கபிலனது தமிழும் பரணனது
தமிழுமாகிய மூன்றினையும், அத்தன்மையன் - அங்ஙனம் உளங்கொண்டு,
அறியுந்தொறும் அறியுந்தொறும் எல்லாம் - உணருந்தோறும்
உணருந்தோறும்.
|