இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம் 143



திருவாலவாயுடைய நாயகனே - திருவாலவாயினை உடைய இறைவனே, நகு
தார் வேம்பன் - விளங்குகின்ற வேப்பமலர் மாலையை யணிந்த பாண்டியன்,
பொன் நிதிபோல் அளவு இறந்த கல்வியும் மிக்குளன் என்று புகல -
பொருட் செல்வ மிக்குடையனாதல் போல அளவிறந்த கல்விச் செல்வமும்
மிக்குள்ளான் என்று (கற்றோர்) கூற, கேட்டு - அதனைக்கேட்டு, சொல்
நிறையும் கவிதொடுத்தேன் - சொற்சுவை நிரம்பிய கவிபாடி அவனிடஞ்
சென்றேன்; சிறிதும் முடி துளக்கானாகி அவமதித்தான் - சிறிதும் தலை
அசைக்காமல் அவமதித்தான்.

     எனது செய்யுள் எத்தன்மை யுடையதென நீ அறிவாய் என்பார்
'தமிழறியும் பெருமானே' என்றார். (8)

பரிவாயின் மொழிதொடுத்து வருணித்தோர்க் ககமகிழ்ந்தோர்                                         பயனு
நல்கா விரிவாய தடங்கடலே நெடுங்கழியே யடுங்கான விலங்கே                                         புள்ளே
பொரிவாய பராரைமர நிரையேவான் றொடுகுடுமிப் பொருப்பே
                                        வெம்பும்
எரிவாய கொடுஞ்சுரமே யெனவிவற்றோ ரஃறிணையொத்
                                   திருந்தா னெந்தாய்.

     (இ - ள்.) எந்தாய் - எமது தந்தையே, பரிவாய் இன்மொழி தொடுத்து
வருணித்தோர்க்கு - அன்புடன் இனியமொழியாற் கவி தொடுத்து வருணித்த
புலவர்களுக்கு, அகமகிழ்ந்து ஓர் பயனும் நல்கா - மனமகிழ்ந்து ஒரு பயனும்
அளிக்காத, விரிவாய, தடங்கடலே - விரிந்த பெரிய கடலும், நெடுங்கழியே
- நெடிய உப்பங்கழியும், அடுங்கான விலங்கே - கொல்லுகின்ற காட்டிலுள்ள
விலங்கும், புள்ளே - பறவையும், பொரிவாய பராரை மரநிரையே -
பொருக்குவாய்ந்த பருத்த அரையையுடைய மரவரிசையும், வான்தொடு
குடுமிப் பொருப்பே - வானை அளாவிய முடியினையுடைய மலையும்,
வெம்பும் எரிவாய கொடுஞ்சுரமே - வெதுப்பு கின்ற அனலைத்
தன்னிடத்துடைய கொடிய பாலைநிலமும், என இவற்று ஓர் அஃறிணை
ஒத்து இருந்தான் - என்று சொல்லப்பட்ட இவற்றுள் ஓர் அஃறிணைப்
பொருளைப் போன்றிருந்தான்.

     கடல் முதலிய அஃறிணைப் பொருள்களை எவ்வளவு வருணிப்பினும்
அவை அகமகிழ்தலும் பயனளித்தலும் இல்லாமைபோல் இவனும் இருந்தனன்
என்றார். இதனால் அவனது இழிவைப் புலப்படுத்தியவாறுங் காண்க.
ஏகாரங்கள் எண்ணுப் பொருளன, பராரை, மரூஉ. (9)

என்னையிகழ்ந் தனனோசொல் வடிவாய்நின்
     னிடம்பிரியா விமையப் பாவை தன்னையுஞ்சொற்
பொருளான வுன்னையுமே
     யிகழ்ந்தனனென் றனக்கியா தென்னா