சங்கவான் றமிழ்த்தெய்வப் புலவோரு முடனெழுந்து சைல வேந்தன்
மங்கைநா யகன்போன வழிபோயங் கிருந்தாரவ் வழிநாள் வைகற்
கங்குல்வாய் புலரவரும் வைகறையிற் பள்ளியுணர் காலத் தெய்தி
அங்கணா யகனடியார் சேவிப்பா ரிலிங்கவுரு வங்குக் காணார். |
(இ
- ள்.) வான்தமிழ்ச் சங்கத் தெய்வப் புலவோரும் - சிறந்த தமிழ்ச்
சங்கத்துத் தெய்வத்தன்மை பொருந்திய புலவர்களும், உடன் எழுந்து - ஒரு
சேர எழுந்து, சைலவேந்தன் மங்கைநாயகன்போன வழிபோய் -
மலைமன்னன் புதல்வியாராகிய உமையின் கேள்வன் சென்றவழியே சென்று,
அங்கு இருந்தார் - அங்குத் தங்கினர்; அவ்வழி நாள் வைகல் கங்குல்வாய்
புலரவரும் வைகறையில் - அந்நாளின் பின்னாள் இராப்பொழுது கழியவரும்
காலைப்போதில், பள்ளி உணர்காலத்து எய்தி - இறைவனது திருப்பள்ளி
எழுச்சிக்காலத்திற் சென்று, அங்கண் நாயகன் அடியார் சேவிப்பார் -
அச்சிவபெருமான் அடியார்கள் வணங்கலுற்றவர்கள், அங்கு இலிங்க
உருக்காணார் - அத் திருக்கோயிலின்கண் இலிங்கத் திருவுருவத்தைக்
காணாதவராய்,
சேவிப்பாராகிய
அடியார் என்றுமாம். (12)
என்னவதி
சயமோவீ தென்றயிர்த்தா ரிரங்கினா ரிதனை யோடி
மன்னவனுக் கறிவிப்பான் வேண்டுமெனப் புறப்பட்டு வருவா ராவி
அன்னவரைப் பிரிந்துறையு மணங்கனையா ரெனவுமல ரணங்கு நீத்த
பொன்னவிர்தா மரையெனவும் புலம்படைத்து பொலிவழிந்த புரமுங்
கண்டார். |
(இ
- ள்.) ஈது என்ன அதிசயம் என்று அயிர்த்தார் - இஃது என்ன
அதிசயம் என்று ஐயுற்று, இரங்கினார் - வருந்தி, ஓடி இதனை மன்னவனுக்கு
அறிவிப்பான் வேண்டும் என - விரைந்து சென்று இச்செய்தியை அரசனுக்கு
அறிவிக்க வேண்டுமென்று கருதி, புறப்பட்டு வருவார் - புறப்பட்டுவரும்
அடியார்கள், ஆவி அன்னவரைப் பிரிந்து உறையும் அணங்கு அனையார்
எனவும் - உயிர்போன்ற கேள்வரைப் பிரிந்து வசிக்கும் தெய்வமகளிர்
போன்ற பெண்கள்போலவும், அலர் அணங்குநீத்த பொன் அவிர்தாமரை
எனவும் - திருமகள் கைவிட்ட பொன்போல விளங்குந் தாமரை போலவும்,
புலம்பு அடைந்து - தனிமை அடைந்து, பொலிவு அழிந்தபுறமும் கண்டார் -
பொலிவழிந்து நிற்கும் நகரத்தினையுங் கண்டனர்.
அயிர்த்தார்
இரங்கினார் என்பவற்றை முற்றாகவே யுரைத்தலுமாம்.
அறிவிப்பான். வினையெச்சம். பொன்னவிர் என்பது தாமரைக்கு
இயற்கையடை. (13)
அரசனிடைப்
புகுந்துள்ள நடுநடுங்கி நாவுணங்கி யரசே யாமொன்
றுரைசெயவஞ் சுதுமுங்க ணாயகனைத் திருப்பள்ளி யுணர்ச்சி நோக்கி
மரைமலர்ச்சேவடிபணியப் புகுந்தனமின் றாங்கவன்றன் வடிவங்
காணேம்
புரமுநனி புலம்படைந்த தென்றழல்வே லெனச்செவியிற் புகுத்த
லோடும். |
|