அனந்தம் உள்ள -
இங்குத் தாமே தோன்றியனவாய் அளவிறந்த
அருட்குறிகள் உள்ளன; தானவர் இயக்கர் சித்தர் - அசுரர்களும்
இயக்கர்களும் சித்தர்களும், வயம் புரி அரக்கர் வானோர் முனிவரர் மனிதர்
உள்ளார் - வெற்றியை விரும்பிய அரக்கர்களும் தேவர்களும் முனிவர்களும்
மனிதர்களும், நயம் பெற விதியால் கண்ட - தாங்கள் விரும்பிய
நலன்களைப் பெறுதற் பொருட்டு ஆகமவிதிப்படி நிலைபெறுத்திய, நம் குறி
அனந்தம் உண்டு - நமது அருட்குறிகளும் பல உள்ளன.
சயம்பு
- சுயம்பு; தானே தோன்றியது. உள்ள, அன்பெறாத பலவறிச்
சொல். குறி - இலிங்கம். ஆல், அசை. (25)
அக்குறி களின்மேம் பட்ட குறியறு பத்து நான்காம்
இக்குறி களின்மேம் பட்ட குறிகளெட் டினைய வெட்டுத்
திக்குறை வானோர் பூசை செய்தன விவற்றியாம் வந்து
புக்குறை குறிநந் தோழன் பூசித்த குறிய தாகும். |
(இ
- ள்.) அக்குறிகளில் மேம்பட்டகுறி அறுபத்து நான்காம் -
அவ்வருட் குறிகளிற் சிறந்த குறிகள் அறுபத்து நான்காகும்; இக்குறிகளில்
மேம்பட்ட குறிகள் எட்டு - இவ்வறுபத்து நான்கு குறிகளிற் சிறந்த குறிகள்
எட்டாகும்; இனைய - இவ்வெட்டுக்குறிகளும், எட்டுத்திக்கு உறை வானோர்
பூசை செய்தன - எட்டுத் திசைகளிலும் இருக்கும் தேவர்களாற்
பூசிக்கப்பட்டன; இவற்று யாம் வந்து புக்கு உறைகுறி - இவ்வெட்டனுள்
யாம் வந்து புகுந்து உறையுங் குறியானது, நம் தோழன் பூசித்த குறியது
ஆகும் - நமது நண்பனாகிய குபேரன் வழிபட்ட குறியாகும்.
குறியது,
அது பகுதிப்பொருள் விகுதி. (26)
அறைந்தவித் தெய்வத் தான மனைத்துமோ ரூழிக் காலத்
திறந்தநந் தோழன் கண்ட விலிங்கமா மதனா லிங்கே
உறைந்தன முறைத லாலே யுத்தர வால வாயாய்ச்
சிறந்திடத் தகுவ தின்று முதலிந்தத் தெய்வத் தானம். |
(இ
- ள்.) அறைந்த இத் தெய்வத்தானம் அனைத்தும் - மேற்கூறிய
இந்த அருட்குறிகள் உள்ள இடம் அனைத்தும், ஓர் ஊழிக்காலத்து இறந்த -
ஒரு ஊழிக் காலத்தில் மறைந்தன; நம் தோழன் கண்ட இலிங்கமாம்
அதனால் - இது நமது நண்பன் கண்டு வழிபட்ட இலிங்கமாகுமாதலால்,
இங்கே உறைந்தனம் - இக்குறியின்கண் உறைந்தருளினோம்; உறைதலாலே
- இங்ஙனம் உறைதலால், இந்தத் தெய்வத்தானம் - இத் தெய்வத்தானமானது,
இன்று முதல் - இன்று முதலாக, உத்தர ஆலவாயாய்ச் சிறந்திடத் தகுவது -
வடதிருவால வாயாகிச் சிறக்கத்தக்கது.
இறந்த,
அன்பெறாத பலவின்பால் முற்று. உத்தர ஆலவாயாய்ச்
சிறந்திடத் தகுவது - வடமதுரை யென்னும் பெயருடன் விளங்கத்தகுவது. (27)
|