இறைவன் திருமுடிமீது
அடித்துப் பின் இறைவனை யறிந்து வழுத்தி வரம்
பெற்றன னென்பதனைப் பாரதத்துக் காண்க. அருச்சுனன் வில்லாலடித்து
வரம் பெற்றமைபோலப் பிரம்பாலடித்து வரம் பெறுதல்கருதிச் 'சிலைப்படை
பொறித்தவனெனப் பெறு வரமைந்தன்' என்றார்; பகைவரை அழிக்கும்
ஆற்றலுங் கொள்க. (38)
ஆகச்செய்யுள்
- 2648
|