(இ
- ள்.) வீங்கும் நீர்ச்சடையான் - பெருக்கெடுக்குங் கங்கையை
யணிந்த சடையினையுடைய இறைவன். எங்கும் மெல்லியல் பிரிவு நோக்கி -
பிரிகின்ற உமையின் துன்பத்தைக் கண்டு, வாங்கு நீர்க்கானல் வாழ்க்கை
வலைஞர் கோன் - வளைந்த கடற்கரையிலுள்ள சோலையில் வாழும்
பரதவமன்னனுக்கு, மகளாய் வைகி ஆங்கு நீ வளர்நாள் - மகளாகப்
பொருந்தி அங்கே நீ வளர்கின்ற அப்பொழுது, யாம் போந்து அருங்கடி
முடித்தும் என்னா - யாம் வந்து அரிய திருமணத்தை முடிப்போமென்று,
தேங்குநீர் அமுது அன்னாளை - நிரம்பிய நீரினையுடைய கடலிற்றோன்றிய
அமுதம் போன்ற அம்மையை, செலவிடுத்து இருந்தான் - போகவிட்டு
இருந்தனன்; இப்பால் - பின்.
வாங்குநர்,
தேங்குநர் என்பன கடல் என்னும் பொருளன. கானல் -
கடற்கரைச்சோலை. முடித்தும் - முடிப்போம்; தன்மைப்பன்மை யெதிர்கால
முற்று. (6)
அன்னது தெரிந்து நால்வா யைங்கரக் கடவு டாதை
முன்னர்வந் திதனா லன்றோ மூண்டதிச் செய்தி* யெல்லாம்
என்னவீர்ங் கவளம் போலாங் கிருந்தபுத் தகங்க ளெல்லாந்
தன்னெடுங் கரத்தால் வாரி யெறிந்தனன் சலதி மீதால். |
(இ
- ள்.) நால்வாய் ஐங்கரக்கடவுள் - தொங்கிய வாயினையும்
ஐந்து திருக்கரங்களையுமுடைய மூத்த பிள்ளையார், அன்னது தெரிந்து -
அச்செய்தியை யறிந்து, தாதை முன்னர் வந்து - தனது தந்தையாகிய
இறைவன் திருமுன் வந்து, இச்செய்தி எல்லாம் இதனால் அன்றோ மூண்டது
என்ன - இந்நிகழ்ச்சி அனைத்தும் இதனாலல்லவா மூண்டது என்று, ஆங்கு
இருந்த புத்தகங்கள் எல்லாம் - அங்கிருந்த சுவடிகளையெல்லாம், தன்
நெடுங்கரத்தால் - தனது நெடிய கையினால், ஈர்ங் கவளம்போல் வாரி -
குளிர்ந்த கவளத்தை அள்ளுவதுபோல அள்ளி, சலதி மீது எறிந்தனன் -
கடலின்கண் வீசினன்.
கவளம்
- யானை யுண்ணும் உணவு. ஆல், அசை. (7)
வரைபக வெறிந்த கூர்வேன் மைந்தனுந் தந்தை கையில்
உரைபெறு போத நூலை யொல்லெனப் பறித்து வல்லே
திரைபுக வெறிந்தா னாகச் செல்வநான் மாடக் கூடல்
நரைவிடை யுடைய நாத னந்தியை வெகுண்டு நோக்கா. |
(இ
- ள்.) வரைபக எறிந்த கூர்வேல் மைந்தனும் - கிரவுஞ்சமலை
பிளக்கு மாறு எறிந்த கூரிய வேற்படையையுடைய முருகக்கடவுளும், தந்தை
கையில் தந்தையாரின் திருக்கரத்தினின்றும், உரைபெறு போத நூலை
ஒல்லெனப்பறித்து - புகழமைந்த சிவஞானபோத நூலை விரைந்து பிடுங்கி,
வல்லே திரைபுக எறிந்தா னாக - விரைந்து அது கடலில் விழ எறிந்தனன்;
(பா
- ம்.) *மூண்ட விச்செய்தி.
|