செக்க ரஞ்சடை யானுறை பதிகளிற் செய்யத்
தக்க தன்றவ னடுநிலை பிழைத்துநுஞ் சார்வாய்
விக்க மெம்மனோர்க் கியற்றுவான் வேறொரு தலத்திற்
புக்க மர்ந்து வாதஞ்செயப் போதுக மென்னா. |
(இ
- ள்.) செக்கர் சடையான் உறை பதிகளில் - சிவந்த
சடையையுடைய சிவன் உறையும் பதிகளில், - செய்யத் தக்கது அன்று -
(இவ்வாதம்) செய்யத்தக்கது அன்று; அவன் நடுநிலை பிழைத்து - அச் சிவன்
நடுவு நிலைமை தவறி, நும் சார்வாய் எம் மனோர்க்கு விக்கம் இயற்றுவான்
- நுமது சார்பில் நின்று எம்மவர்க்குக் கெடுதி செய்வான் (ஆகலின்), வேறு
ஒரு தலத்தில் புக்கு அமர்ந்து வாதம் செய - மற்றொரு தலத்திற் போயிருந்து
வாது புரிதற்கு, போதுகம் என்னா - போகக் கடவோம் என்றுகூறி.
விக்கினம்
எனற்பாலது விக்கம் எனத் திரிந்தது. (32)
வென்றி மாமுர சுறங்கிடா வியனகர்ப்புறம் போய்
மன்றல் வேம்பன்முன் கதழெரி மடுத்திடிற் பிழைப்ப
தொன்று வேவதொன் றீதுகொண் டுமர்களு மெமரும்
இன்று வெல்வதுந் தோற்பதுங் காண்டுமென் றெழுந்தார். |
(இ
- ள்.) வென்றிமாமுரசு உறங்கிடாவியன் நகர்ப்புறம் போய் -
பெரிய வெற்றிமுரசு இடையறாது ஒலிக்கும் இடமகன்ற இந்நகரின் வெளியே
சென்று, மன்றல் வேம்பன் முன் கதழ் எரி மடுத்திடில் - மணம் பொருந்திய
வேப்ப மலர் மாலையை யணிந்த பாண்டியன் முன் மிக்கெரியும் தீயின்கண்
நம்மேடுகளையிட்டால், பிழைப்பது ஒன்று வேவது ஒன்று ஈது கொண்டு -
வேவாதது ஒன்று வேவது ஒன்றாகிய இப்வேதுவினாலேயே, உமர்களும்
எமரும் இன்று வெல்வதும் தோற்பதும் காண்டும் என்று எழுந்தார் -
உம்மவரும் எம்மவரும் இன்று வெற்றி பெறுவதும் தோல்வியுறுவதும்
பார்ப்போமென்று எழுந்தனர்.
உறங்கிடாமை
- எப்பொழுதும் ஒலித்தல். கதழ்எரி - வேகமுடைய
நெருப்பு. (33)
[ஒரு
போகு கொச்சகம்] |
ஈட்டுவஞ்ச
நெஞ்சரே யெழீஇநகர்ப் புறம்புபோய்க்
கீட்டிசைக்க ணோரழற் கிடங்குதொட் டெழுந்துவான்
நீட்டுகோ டரங்குறைத்து நிறையவிட்டு நெட்டெரி
மூட்டினார்த மாதரார் வயிற்றுமிட்டு மூட்டினார். |
(இ
- ள்.) வஞ்சம் ஈட்டு நெஞ்சரே எழீஇ - வஞ்சகத்தையே தேடித்
தொகுக்கும் உள்ளத்தையுடைய அச்சமணர்களே முன்னர் எழுந்து,
நகர்ப்புறம்பு போய் - நகருக்கு வெளியே சென்று, கீழ் திசைக் கண் ஓர்
அழல் கிடங்கு தொட்டு - கீழைத் திசையின் கண் ஒரு தீக்குழி தோண்டி,
எழுந்து வான் நீட்டு கோடரம் குறைத்து - மேலெழுந்து வானை அளாவிய
|