சாபமாகிய
பெருவலி என்றுமாம். சாபம் பெருவலி என்பது பாடமாயின்,
பெருவலி என்பது இறைவனை யுணர்த்தும்; 'மதவலி' என்பது
போல. (10)
நாயக னேவ
லாலே நாயகி வலைஞர் மாதர்
ஆயது நந்திப் புத்தே ளடுசுற வாகி முந்நீர்
மேயதுங் கருணை வள்ளன் மீன்படுத் தணங்கை வேட்டுப்
போயது மவட்குக் கேள்வி புகன்றது முறையிற் சொல்வாம். |
(இ
- ள்.) நாயகன் ஏவலாலே - இறைவனது ஆணையினால், நாயகி
வலைஞர் மாதர் ஆயதும் - இறைவி பரதவமாது ஆனதும், நந்திப்புத்தேள்
அடுசுறவு ஆகி முந்நீர் மேயதும் - திருநந்திதேவர் கொல்லுகின்ற
சுறாமீனாகிக் கடலுட் சென்றதும், கருணைவள்ளல் மீன்படுத்து அணங்கை
வேட்டுப் போயதும் - அருள் வள்ளலாகிய அவ்விறைவன் அம்மீனைப்
பிடித்து அம் மாதினை மணந்து போனதும், அவட்குக் கேள்வி யகன்றதும் -
அவ் வம்மையாருக்குத் திருவுத்தரகோச மங்கையில் உபதேசஞ்
செய்தருளியதுமாகிய இவற்றை, முறையில் சொல்வாம் - முறையாகக்
கூறுவாம்.
படுத்து
- அகப்படுத்து. (11)
[கலிநிலைத்துறை] |
சூழும் வார்திரை
வையையந் துறைகெழு நாட்டுட்
கீழை யார்கலி முகத்தது நெய்தலங் கீழ்நீர்
ஆழ நீள்கருங் கழியகழ் வளைந்துகா ரளைந்த*
தாழை மூதெயி லுடுத்ததோர் தண்டுறைப் பாக்கம். |
(இ
- ள்.) ஓர் தண் துறைப்பாக்கம் - ஒரு தண்ணிய நீர்த்துறைகள்
வாய்ந்த பாக்கம், வார்திரை சூழும் வையை அம் துறைகெழு நாட்டுள் -
நீண்ட அலைகள் சூழ்ந்த வையை யாற்றின் அழகிய துறைகள் பொருந்திய
பாண்டி நாட்டின்கண், கீழை ஆர்கலி முகத்தது - கீழைக்கடலின்
முகத்துள்ளது, நெய்தலம் கீழ்நீர் - (அது) நெய்தனிலத்து உவர்நீரினையுடைய,
ஆழம் நீள்கருங்கழி அகழ் வளைந்து - ஆழமுடைய நீண்ட கரிய கழியாகிய
அகழியினாற் சூழப்பட்டு, கார் அளைந்த தாழை மூதெயில் உடுத்தது -
முகிலை அளாவி உயர்ந்த தாழையாகிய பெரிய மதிலாற் சூழப்பட்டது.
நெய்தலம்,
அம் சாரியை. கீழ்நீர் - உவர்நீர்; கூவல் என்பாருமுளர்.
கழி - நெய்தனிலத்து நீரோடை. கழிஅகழி போலவும் உடுத்ததென்ப.
பாக்கம் - கடற்பக்கத்து ஊர். உடுத்ததாகிய பாக்கம் முகத்தது என
முடித்தலுமாம். (12)
முடங்கு முள்ளிலை
யாற்புதைந் தெதிரெதிர் மொய்த்து
நுடங்கு கைதைபோ தொடுவளி நூக்கநின் றசைவ
மடங்கு மெய்யராய்க் கையிருங் கேடக வட்டத்
தடங்கி வாள்பனித் தாடம ராற்றுவாரனைய. |
(பா
- ம்.) *காரளைந்து; தாதளைந்து.
|