தூய்மையுள்ளவனாய்,
சிறிது தீய தீவினைச்செய்தியால் - சிறிது கொடிய
தீவினையைச் செய்தவதனால், திண்திமில் வாணர் மேய சாதியில் -
திண்ணிய தோணியால் வாழ்வோர் பொருந்திய பரதவர் குலத்தில்,
பிறந்துளான் - பிறந்தனன்; மேம்படும் அனையான் - (அங்ஙனம் பிறந்து)
மேம்பட்ட அவன்.
தீயதீவினை
- மிக்க தீமையையுடையவினை; தீவினை என்றது பெயர்
மாத்திரமாக நின்ற தெனினும் அமையும். திமில் வாணர் - தோணியிற்
சென்று மீன் பிடித்து வாழ்பவர். வாணர், வாழ்நர் என்பதன் மரூஉ. (20)
செடிய காருடற் பரதவர் திண்டிமி னடத்தா
நெடிய வாழியிற் படுத்தமீன் றிறைகொடு நிறைக்குங்
கடிய வாயிலோ னவர்க்கெலாங் காவலோ னேற்றுக்
கொடிய வானவ னடிக்குமெய் யன்புசால் குணத்தோன். |
(இ
- ள்.) செடிய கார் உடல் பரதவர் - முடைநாற்ற முடைய கரிய
உடலையுடையவலைஞர், திண்திமில் நடத்தா - திண்ணிய தோணியை
நடத்தி, நெடிய ஆழியில் படுத்தமீன் - நீண்டகடலிற் பிடித்த மீன்களை,
திறைகொடு நிறைக்கும் கடிய வாயிலோன் - திறையாக ஏற்று நிறைக்கப்படுங்
காவலையுடைய வாயிலை யுடையவன்; அவர்க்கு எலாம் காவலோன் -
அப்பரதவர் அனைவருக்கும் காவலன்; ஏற்றுக் கொடிய வானவன் அடிக்கு -
இடபக்கொடியையுடைய சிவபெருமான் திருவடிக்கு, மெய் அன்பு சால்
குணத்தோன் - உண்மையன்பு நிறைந்த குணத்தினை யுடையவன்.
செடிய
கொடிய என்பன பெயரடியாகவும், நெடிய என்பது
பண்படியாகவும், கடிய என்பது உரியடியாகவும் பிறந்த குறிப்புவினைப்
பெயரெச்சம். (21)
மகவி லாமையா லாற்றநாண் மறுமையோ டிம்மைப்
புகலி லானென வருந்துவா னொருபகற் போது
தகவு சால்பெருங் கிளையொடுஞ் சலதிமீன் படுப்பான்
அகல வார்கலிக் கேகுவா னதன்கரை யொருசார். |
(இ
- ள்.) ஆற்றநாள் மகவு இலாமையால் - பன்னாட்கள் வரை
மகப் பேறு இன்றி, மறுமையோடு இம்மைப்புகல் இலான் என - மறுமைக்கும்
இம்மைக்கும் ஒரு பற்றுக்கோடில்லாதவன் போல, வருந்துவான் - வருந்தும்
அப்பரதவமன்னன், ஒருபகல் போது - ஒரு நாள், தகவுசால்
பெருங்கிளையொடும் - தகுதிமிக்க பெரிய சுற்றத்தாருடன், சலதிமீன்படுப்பான்
- கடல் மீனைப் பிடிப்பதற்கு, அகல ஆர் கலிக்கு ஏகுவான் - அகன்ற
கடலுக்குச்செல்கின்றவன், அதன் கரை ஒருசார் - அக்கடற்கரையின் ஒரு
பக்கத்தில்.
வருந்துவான்,
பெயர். படுப்பான், வினையெச்சம். (22)
|