தக்க மேருமா
மலைமக னோடையிற் றவத்தான்
மிக்க மீனவன் வேள்வியில் விரும்பிய மகவாய்ப்
புக்க நாயகி தன்பதி யாணையாற் புலவு
தொக்க மீன்விலை வலைஞன்மேற் றவப்பயன் றுரப்ப* |
(இ
- ள்.) தக்கமேருமா மலைமகன் - தகுதி வாய்ந்த பெரிய
மலையரையன் செய்த, மிக்கதவத்தால் ஓடையில் - சிறந்த தவத்தினால்
மலரோடையிலும், மீனவன் வேள்வியில் - பாண்டியன் செய்த
சிறந்ததவத்தினால் வேள்வியிலும், விரும்பிய மகவாய் - அவர்கள் வேண்டிய
குழந்தை வடிவமாய், புக்கநாயகி - சென்று வெளிப்பட்ட இறைவி, தன்பதி
ஆணையால் - தனது பதியாகிய இறைவன் ஆணையினால், புலவுதொக்க
மீன்விலை வலைஞன் - புலால்நாற்ற மிக்க மீன்விற்கும் பரதவ மன்னன்,
மேல் தவப்பயன் துரப்ப - முற்பிறப்பிற் செய்த தவப்பயன் செலுத்த.
பொன்னென்னும்
ஒற்றுமைபற்றி இமயத்தை மேருவென்றும், மேருவை
இமயமென்றும் ஒரோவழிக் கூறுவர்; "இமயவில் வாங்கிய" என
எட்டுத்தொகையுள் வருதலுங் காண்க. மிக்க தவத்தால் என மாறி
மலைமகனுக்கும் மீனவனுக்கும் கூட்டுக. மலையரையனுக்கு மகளானமையைக்
கந்தபுராணம் பார்ப்பதிப்படலத்திலும், மலயத்துவச பாண்டியனுக்கு
மகளானமையை இப்புராணத்துத் தடாதகைப் பிராட்டியார் திருவவதாரப்
படலத்திலும் காண்க. (23)
இச்சை யாலவ
னன்பினுக் கிரங்குவாள் போலச்
செச்சை வாய்திறந் தழுதொரு திருமக வாகி
நெய்ச்ச பாசிலைப் புன்னைநன் னீழலிற் கிடந்தாள்
மைச்ச காருடற் கொடுந்தொழில் வலைஞர்கோன் கண்டான். |
(இ
- ள்.) இச்சையால் ஒரு திருமகவு ஆகி - தமது இச்சையின்
வழியே ஒரு திருமகளாகி, அவன் அன்பினுக்கு இரங்குவாள் போல் -
அப்பரதவ மன்னன் அன்பினுக்குத் திருவுள்ள மிரங்குவாள் போல,
செச்சைவாய் திறந்து அழுது - தமது செந்நிறமுள்ள திருவாயினைத்திறந்து
அழுது, நெய்ச்ச பாசிலைப்புன்னை நல் நீழலில் கிடந்தாள் -
நெய்ப்பினையுடைய பசிய இலைகளடர்ந்த புன்னை மரத்தின் குளிர்ந்த
நிழலின்கண் கிடந்தனள்; மைச்சகார் உடல் கொடுங்தொழில் வலைஞர்
கண்டான் - கரிய பெரிய உடலையும் கொடிய தொழிலையு முடைய பரதவர்
மன்னன் கண்டனன்.
செச்சை
- செந்நிறம். நெய்த்த, மைத்த என்னும் குறிப்புப்
பெயரெச்சங்கள் எதுகை நோக்கிப் போலியாயின. கருமை பெருமையு
மாகலின் காருடல் என்பதற்குப் பெரிய உடல் என உரைக்கப்பட்டது. (24)
(பா
- ம்.) *தவப்பயன் றூர்ப்ப.
|