(இ
- ள்.) பிறவி அந்தகன் தெரிந்து - பிறவிக்குருடன்
(பொருள்களை) அறியுமாறு; கண்பெற்றென - கண் பெற்றாற்போலவும்,
கழிந்த வறியன் நீள்நிதி பெற்றென வாங்கினாள் - மிக்க வறுமையுடையோன்
பெரிய வைப்பு நிதியைப் பெற்றாற் போலவும் வாங்கினாள்; எறியும்
வேலையின் வலைஞர் ஆர்த்தனர் - அலை வீசுங் கடல் போல வலைஞர்
ஆரவாரித்தனர்; குறிய வாள் நகை வலைச்சியர் - ஒளி பொருந்திய சிறிய
பற்களையுடைய வலைச்சியர், கை எறிந்து இரட்டி - கையை ஒன்றோடொன்று
தாக்கி வீசி, குரவைகுழறினார் - குரவைப்பாடல் பாடினார்.
பிறந்தநாள்
தொட்டுக் கண்ணில்லானும் வறியனும் இடையேகண்ணும்
நிதியும் பெற்றால் எய்தும் பெருமகிழ்ச்சிபோல மகப்பேறில்லாதவள் மகவு
கிடைத்த தென்னும் பெருமகிழ்ச்சியோடு வாங்கினாள் என்க. தெரிந்து -
தெரிய; எச்சத் திரிபு. பெற்றென - பெற்றாலென; விகாரம். கழிந்த,
உரியடியாகப் பிறந்த பெயரெச்சம். இரட்டி - மாறிவீசி. (27)
பிழையில் கற்புடை மனைவியும் பெறாதுபெற் றெடுத்த
குழவி யைத்தடங் கொங்கையுங் கண்களுங் குளிரத்
தழுவி முத்தமிட் டுச்சிமோந் தன்புளந் ததும்ப
அழகி தாகிய மணிவிளக் காமென வளர்ப்பாள். |
(இ
- ள்.) பிழை இல் கற்புடை மனைவியும் - தவறில்லாத
கற்பினையுடைய மனைவியும், பெறாதுபெற்று எடுத்த குழவியை - வருந்திப்
பெறாமற் பெற்றெடுத்த மகவினை, தடங்கொங்கையும் கண்களும்
குளிரத்தழுவி - பெரிய கொங்கையும் விழிகளுங் குளிருமாறு புல்லி,
முத்தமிட்டு உச்சிமோந்து - முத்தங்கொடுத்து உச்சிமோந்து, உளம் அன்பு
ததும்ப - உள்ளத்தின்கண் அன்பு நிறைந்து ததும்ப, இது அழகாகிய
மணிவிளக்கு ஆம் என வளர்ப்பாள் - இம்மகவு ஒரு அழகிய மாணிக்க
விளக்காகும் என்று கருதிப்போற்றி வளர்ப்பாளாயினள்.
பிழைஇல்
கற்பு - கலங்கா நிலைமையுடைய கற்பு. பெறாது -
சூலுளைந்து பெறாது. இது அழகாகிய எனப் பிரித்தியைக்க;
அழகினையுடையதாகிய என்றுமாம். என்றும் பொலிவு குன்றாமைபற்றி
'மணிவிளக்காமென' என்றார். (28)
புலவு மீன்விலைப் பசும்பொனாற் செய்தபல் பூணும்
இலகு மாரமும் பாசியுங் காசிடை யிட்டுக்
குலவு கோவையுஞ் சங்கமுங் குலத்தினுக் கிசைய
அலகி லாதபே ரழகினுக் கழகுசெய் தணிந்தாள். |
(இ
- ள்.) புலவுமீன் விலைப்பசும் பொனால் செய்த பல்பூணும் -
புலால் நாற்றமுடைய மீன்களை விற்றதனால் வந்த பசியபொன்னாற்செய்த
பல அணிகளும், இலகும் ஆரமும் பாசியும் - விளங்காநின்ற முத்துக்களும்
பாசிகளுமாகிய இவற்றுடன், காசு இடை இட்டு - மணிகள் இடையிற்
கோக்கப்பட்டு, குலவுகோவையும் - விளங்காநின்ற மாலைகளும், சங்கமும் -
அக்குமணிகளுமாகிய இவற்றால் குலத்தினுக்கு இசைய - தங் குலத்துக்குப்
|