ஆல வாயுடை நாயக னேவிய வாறே
மாலை தாழிள மதிச்சடை மகுடமுங் கரங்கள்
நாலு மாகிய வடிவுடை நந்தியுஞ் சுறவக்
கோல மாகிவெண் டிரைக்கடல் குளித்தினி திருந்தான். |
(இ
- ள்.) ஆலவாய் உடை நாயகன் - திருவாலவாயுடைய இறைவன்,
ஏவியவாறே - பணித்தவண்ணமே, மாலை தாழ் இளமதிச்சடை மகுடமும் -
மாலை தாழ்ந்த இளம்பிறையணிந்த சடைமுடியும், கரங்கள் நாலுமாகிய வடிவு
உடை நந்தியும் - நான்கு திருக்கரங்களும் பொருந்திய வடிவினையுடைய
திருநந்திதேவும், சுறவக்கோலமாகி - சுறாமீன் வடிவமாகி, வெண்திரைக்கடல்
குளித்து இனிது இருந்தான் - வெள்ளிய அலைகளையுடைய கடலில் மூழ்கி
இனிதாக இருந்தனன்.
நந்தியும்,
உம்மை எச்சப்பொருட்டு. (32)
குன்றெ றிந்தவேற் குழகனுங் கரிமுகக் கோவும்
அன்றெ றிந்ததந் திரமெலாஞ் சிரமிசை யடக்காக்
கன்றெ றிந்தவ னறிவருங் கழன்மனத் தடக்கா
நின்றெ றிந்தகன் மத்தென* வுழக்கிடா நிற்கும். |
(இ
- ள்.) குன்று எறிந்தவேல் குழகனும் - கிரவுஞ்சமலையைப்
பிளந்த வேற்படையை யுடைய முருகக்கடவுளும், கரிமுகக் கோவும் -
யானை முகத்தை யுடைய மூத்தபிள்ளையாரும், அன்று எறிந்த தந்திரம்
எலாம் - அன்று கடலின்கண் வீசிய நூல்களனைத்தையும், சிரமிசை அடக்கா
- முடியின்கண் அடக்கியும், கன்று எறிந்தவன் அறிவரும் கழல் - விளங்கனி
உதிரக் கன்றினை வீசிய திருமாலும் அறிதற்கரிய திருவடியை, மனத்து
அடக்கா நின்று - மனத்தின்கண் அடக்கியும் நின்று, எறிந்த நல் மத்து என
உழக்கிடாநிற்கும் - கடலைக்கலக்கிய மந்தரமலையாகிய மத்தைப்போல
அதனைக் கலக்கா நின்றது அச் சுறா மீன்.
தந்திரம்
- நூல்; ஆகமம் ஓரசுரன் ஆன்கன்றின் வடிவு கொண்டு
தீங்கு புரியவருதலையறிந்த கண்ணன் அக்கன்றினைக் குணிலாகக்கொண்டு
விளவின்கனி யெறிந்து அவனுயிர் செகுத்தனன் என்பது வரலாறு;
"கன்றுகுணிலாக்
கனியுகுத்த மாயவன்"
என்றார் இளங்கோவடிகளும்.
(33)
கிட்டுந்
தோணியைப் படகினைக்+ கிழிபட விசைபோய்த்
தட்டுஞ் சோங்கினை மேலிடு சரக்கொடுங் கவிழ
முட்டுஞ் சீறிமேல் வரும்பல சுறவெலா முடுக்கி
வெட்டுங் கோடுகோத் தேனைய மீனெலாம் வீசும். |
(பா
- ம்.) *வன்மத்தென. +படவினை.
|