நுளைச்சேரியிலுள்ள
குடில்களை வீழ்த்துமாறு துள்ளும்; நீர் குடித்து
எழுமழை சூல் இறப்பாயும் - நீரைப்பருகி மேலே எழும்முகிலின்
கருச்சிதையுமாறு பாயும்; அந்தத் தெள்ளும் நீர்த்துறை - அந்தத் தெளிந்த
நீரினையுடைய துறையின்கண், மொய்கலம்நடைஅற இன்னணம் திரியும் -
நெருங்கிய கப்பல்களின் போக்கு வரவு இல்லையாமாறு இங்ஙனம் உலவும்.
(36)
எற்றி தாலெனத்
துறைமகன் யாமிது பிடிக்கும்
பெற்றி யாதெனக் கிளையொடும் பெருவலைப் பாசம்
பற்றி யாழியூர் படகுகைத்* தெறிந்தனன் படகைச்
சுற்றி வாய்கிழித் தெயிற்றிறப் பாய்ந்தது சுறவம். |
(இ
- ள்.) துறைமகன் - நெய்தனிலத்தலைவன், இது எற்று என -
இஃது எத்தன்மைத்து எனவும்,யாம் இது பிடிக்கும் பெற்றியாது என - யாம்
இதனைப் பிடிப்பது எவ்வாற்றாலெனவும் (கருதி), கிளையொடும் ஆழி
ஊர்படகு உகைத்து - தமருடன் கடலின்கண் செல்லும் படகினைச் செலுத்தி,
பெருவலைப் பாசம் பற்றி எறிந்தனன் - பெரிய வலைக்கயிற்றைப் பிடித்து
வீசினன்; சுறவம் - அச்சுறாமீன், படகைச் சுற்றி வாய் கிழித்து -
அப்படகினைச் சூழ்ந்து வாயைப் பிளந்து, எயிற்று இறப்பாய்ந்தது - தனது
கொம்பினால் அது சிதையுமாறு பாய்ந்தது.
எற்றிதால்,
ஆல் அசை. துறைமகன் - துறைவன்; நெய்தற்றலைவன்.
வாய்கிழித்து - வாய் பிளந்து; "தீவா யுழுவை கிழித்ததந்தோ" என்னும்
திருச்சிற்றம்பலக் கோவையார்ச் செய்யுளிலும் கிழித்ததென்பது
இப்பொருட்டாதல் காண்க. எயிற்றால் என மூன்றனுருபு விரிக்க. (37)
படவு டைப்பவோர்
தோணிமேற் பாய்ந்துமத் தோணி
விடவு றத்தெறித் தெறிந்திட விசைத்தொரு சோங்கின்
இடைபு குந்துநீள் வலையெறிந் திங்ஙனம் வெவ்வே
றுடல்பு குந்துழ லுயிரெனப் பரதனு முழல்வான். |
(இ
- ள்.) படவு உடைப்ப - இங்ஙனம் அப் படகினை உடைக்க, ஓர்
தோணி மேல் பாய்ந்தும் - ஒரு தோணிமேற் பாய்ந்து வலைவீசியும்,
அத்தோணி விடவு உறத்தெறித்து எறிந்திட - அத்தோணியும் பிளவுபடுமாறு
பாய்ந்து சிதைக்க, விசைத்து ஒரு சோங்கின் இடை புகுந்து நீள் வலை
எறிந்து - விரைந்து ஒரு சோங்கின்கண் ஏறி நீண்ட வலையை வீசியும்,
இங்ஙனம் - இவ்வாற்றால், வெவ்வேறு உடல் புகுந்து உழல் உயிர் என -
வெவ்வேறு உடலின்கட்புகுந்து உழலும் உயிர்போல, பரதனும் உழல்வான் -
பரதவமன்னனும் உழன்று திரிவானாயினன்.
(பா
- ம்.) *படவுகைத்து.
|