18திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



     (இ - ள்.) முடங்கு வெஞ்சிலை வில்லரோடு முடங்கு வெஞ்சிலை
வில்லரும் - வளைந்த கொடிய வில்லையுடைய வீரருடன் வில் வீரரும்,
விடம் கலுழ்ந்திடு வேலரோடு விடம் கலுழ்ந்திடு வேலரும் - நஞ்சினை
யுமிழும் வேலினையுடைய வீரருடன் வேல்வீரரும், இடம் கை தோல் வலம்
வாளரோடும் - இடக்கையிற் கேடகமும் வலக்கையில் வாட்படையு முடைய
வாள் வீரருடன், இடம் கை தோல் வலம் வாளரும் - அவற்றையுடைய
வாள் வீரரும், மடங்கல் ஏறும் மடங்கல் ஏறும் மலைப்பது என்ன - சிங்க
வேறும் சிங்க வேறும் போர்புரிவது போல, மலைப்பர் - போர் புரிவர்.

     சிலை என முன் வந்தமையின் வில்லர் என்பது வீரர் என்னும் பெயர்
மாத்திரையாய் நின்றது. (13)

அரவி னன்னில மும்பு யம்பொறை யாற்று மீனவ னாற்றல்கூர்
புரவி யின்னிரை வைய மேல்கொடு போந்த நேரியர் வேந்தனேர்
விரவி மின்னிய முரசி யம்ப மிடைந்து வெஞ்சம ராடுமா
றிரவி தன்னொடு மதிய வன்பொர வேகி னானிக ராகுமால்.

     (இ - ள்.) அரவின் - அனந்தன் என்னும் பாம்பினைப்போல,
நல்நிலம் அம்புயம் பொறை ஆற்றும் மீனவன் - நல்ல நிலவுலகத்தை
அழகிய தோளினாற் றாங்கும் பாண்டியன், ஆற்றல் கூர் புரவியின் நிரை
வையம் மேல் கொடு - வலி மிக்க குதிரைகள் வரிசையாகப் பூட்டப்பட்ட
தேரில் ஏறி, போந்த நேரியர் வேந்தன் நேர் விரவி - போருக்கு வந்த
சோழமன்னன் எதிர் சென்று கலந்து, மின்னிய முரசு இயம்ப - விளங்கிய
போர் முரசு ஒலிக்க, மிடைந்து வெஞ்சமர் ஆடும் ஆறு - நெருங்கி
வெவ்விய போர் புரியுந் தன்மை, இரவி தன்னொடு மதியவன் பொர
ஏகினால் நிகர் ஆகும் - சூரியனோடு சந்திரன் போர்புரியச் சென்று
புரிந்ததை ஒக்கும்.

     அரவின், இன் : ஒப்புப் பொருட்டு; அரவினாற் சுமக்கப்பட்ட
நிலத்தை என விரித்துரைத்தலுமாம். நேரியர் - நேரி வெற்பினை யுடையவர்;
சோழர். பரிதி மரபினனாகிய சோழனொடு திங்கள் மரபினனாகிய
பாண்டியன் பொரச் சென்றது பரிதியொடு திங்கள் பொரச் சென்றது போலும்
என்றார்; இதனாற் சோழன் முன் பாண்டியன் ஆற்றல் குன்று மென்பதும்
குறிப்பித்தவாறாயிற்று. (14)

துள்ளு மாவொலி தான யாறு துளும்பு மாவொலி தூண்டுதேர்
தள்ளு மாவொலி படையொ டும்படை தாக்கு மாவொலி
                                      பொருநரார்த்
தெள்ளு மாவொலி மள்ளர் பைங்கழ லேங்கு மாவொலி
                                       வீங்கியந்
தெள்ளு மாவொலி வேறு பாடு திரிந்து கல்லென லாயதே.

     (இ - ள்.) துள்ளும் மா ஒலி - தாவிச் செல்லுங் குதிரைகளின்
கனைப்பொலியும், தான யாறு துளும்பும் மா ஒலி - மத நீரை ஆறுபோலப்
பெருக்கும் யானைகளின் பிளிறொலியும், தூண்டு மா தள்ளும் தேர் ஒலி -
தூண்டப்படுங் குதிரைகளால் இழுக்கப்படுந் தேர்களின் ஒலியும், படையொடு
படைதாக்கும் மா ஒலி - படைகளொடு படை தாக்கும் பேரொலியும்,