180திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



     (இ - ள்.) நந்திநாதனும் இனையனாய் - திருநந்திதேவும்
இத்தன்மையனாயும், அங்கயல் நாட்டத்து - அழகிய கயல்போலும்
கண்களையும், இந்துவாள் நுதலாளும் - பிறைபோன்ற ஒள்ளிய நெற்றியையும்
உடைய தேவியும், அங்கு அனையளாய் இருப்ப - அங்கு
அத்தன்மையளாயும் இருக்க, நாலிரண்டு தந்தி ஏந்திய - எட்டு என்னைகள்
தாங்கிய, தபனிய விமானத்து - பொன் விமானத்தின்கண் எழுந்தருளிய,
உந்து நீர்ச்சடையார் - தாவுகின்ற கங்கையை யணிந்த சடையையுடைய
சோமசுந்தரக்கடவுள், மணம் உன்னினார் - திருமணத்தினைத் திருவுளம்
கொண்டருளினர்.

     மன், ஓ அசைகள். (43)

உயர்ந்த சாதியுந் தம்மினு மிழிந்தவென் றுன்னிக்
கயந்த நெஞ்சுடை வலைக்குலக் கன்னியை வேட்பான்
வியந்து கேட்பதெவ் வாறவர் வெறுக்குமுன் னவருக்
கியைந்த மீன்வலை யுருவெடுத் தேகுது மென்னா.

     (இ - ள்.) உயர்ந்த சாதியும் - உயர்ந்த மரபுகளும், தம்மினும் இழிந்த
என்று உன்னி - தங்கள் மரபினும் தாழ்ந்தனவே என்று கருதி, கயந்த
நெஞ்சுடை வலைக்குலக்கன்னியை - பெருமையமைந்த உள்ளத்தையுடைய
வலைக்குலத்துத் தோன்றிய அம்மையை, வேட்பான் வியந்து கேட்பது
எவ்வாறு - மணக்கும் பொருட்டு மேன்மை கூறிக் கேட்பது எங்ஙனம், அவர்
வெறுக்குமுன் - அங்ஙனம் கேட்டு அவர் வெறுத்து இல்லையென்பதற்கு
முன்னரே, அவருக்கு இயைந்த மீன் வலை உரு எடுத்து ஏகுதும் என்னா -
அவருக்குப் பொருந்திய மீன் பிடிக்கும் வலைஞன் உருவினை எடுத்துப்
போவோம் என்று கருதி.

     கயந்த, கய என்னும் உரியடியாகப்பிறந்த பெயரெச்சம்; கய
பெருமையாதலை, "தடவும் கயவும் நளியும் பெருமை" என்னும்
தொல்காப்பியச் சூத்திரத்தாலறிக; இனி, கசந்த என்பதன் போலியாகக்
கொண்டு, பிற குலங்களை வெறுத்த என்றுரைத்தலுமாம். வேட்பான்,
வினையெச்சம் வலை - வலைஞன். (44)

         [அறுசீரடியாசிரிய விருத்தம்]
கருகிருண் முகந்தா லன்ன கச்சினன் கச்சோ டார்த்த
சுரிகையன் றோண்மே லிட்ட துகிலினன் குஞ்சி சூட்டும்*
முருகுகொப் பளிக்கு+ நெய்தற் கண்ணியன் மூத்த வானோர்
இருவரு மறையுந் தேடி யிளைப்பவோர் வலைஞ னானான்.

     (இ - ள்.) கருகு இருள் முகந்தால் அன்ன கச்சினன் - மிகக்கரிய
இருளை முகந்தாலொத்த கச்சினையுடையவனாய், கச்சொடு ஆர்த்த
சுரிகையன் - அக்கச்சுடன் கட்டிய உடைவாளை யுடையவனாய், தோள்மேல்


     (பா - ம்.) *குஞ்சிச்சூட்டும்; குஞ்சிசூடும். +கொப்புளிக்கும்.