186திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



கிளையுநங் கோனும் வீசு வலைஞராய்க் கிளர்தோ ளாற்றல்
விளைவொடு முயன்று பன்னாள் வினைசெயப் படாத மீனிவ்
விளையவ னொருவன் றானே யொருவிசை யெறிந்தா னீர்த்தான்
அளியநங் குலத்தோர் தெய்வ மகனிவ னாகு மென்றார்.

     (இ - ள்.) நம்கோனும் கிளையும் - நமது மன்னனும் அவன்
சுற்றத்தாரும், வீசு வலைஞராய் - வீசுகின்ற வலையினையுடையராய்,
கிளர்தோள் ஆற்றல் விளைவொடு - விளங்குகின்ற தோள்வன்மையின்
கிளர்ச்சியொடு, பன்னாள் முயன்று வினைசெயப் படாதமீன் - பலநாட்கள்
வரையில் முயன்று வீசியும் அகப்படாத மீனினை, இவ்விளையவன் ஒருவன்
தானே - இவ்விளைஞன் ஒருவனே, ஒரு விசை எறிந்தான் ஈர்த்தான் -
ஒருமுறை வலையினை வீசிச் சுருக்கி இழுத்துக் கரையிலிட்டான்; இவன்
நம் குலத்து அளிய ஓர் தெய்வமகன் ஆகும் என்றார் - இவன் நமது
குலத்திற்குரிய அருளையுடைய ஒரு தெய்வமகனாவான் என்று கூறினார்.

     எறிந்தான், முற்றெச்சம். அளிய - அருளுடைய. (56)

கைதைசூழ் துறைவ னோகை கைமிகப் பம்பை யேங்க
நொய்தெனு நுசுப்பிற் கள்வாய் நுளைச்சியர் குரவை தூங்கப்
பைதழை பகுவாய்க் கச்சைப் பரதவற் கலங்கன் ஞாழல்*
செய்தபூங் கோதை மாதைத் திருமணம் புணர்த்தி னானே.

     (இ - ள்.) கைதைசூழ் துறைவன் - தாழை சூழ்ந்த
நெய்தனிலத்தலைவன், ஓகை கைமிக - மகிழ்ச்சி மிக்கோங்க, பம்பை ஏங்க
- நெய்தனிலப்பறை ஒலிக்கவும், நொய்து எனும் நுசுப்பில் - நுண்ணியது
என்று சொல்லப்படும் இடையினையும், கள்வாய் - கள்ளுண்ட
வாயினையுமுடைய, நுளைச்சியர் குரவை தூங்க - நுளைச்சியர் குரவைக்
கூத்தாடவும், பைதழை பகுவாய்க் கச்சைப் பரதவற்கு - படம் விரிந்த
பிளந்த வாயையுடைய பாம்பாகிய கச்சினையுடைய வலைஞர் பெருமானுக்கு,
ஞாழல் செய்த அலங்கல் கோதைமாதை - புலிநகக் கொன்றைமலராற்
றொடுத்த பொலிவுமிகும் மாலையையணிந்த கூந்தலையுடைய தனது
புதல்வியை, திருமணம் புணர்த்தினான் - திருமணம் செய்வித்தான்.

     குரவை - கைகோத்தாடும் கூத்து. பகுவாய் - பிளந்த வாயையுடையது;
பாம்பு. ஞாழற் செய்பூத அலங்கல் என மாறுக. (57)

அந்நிலை வதுவைக் கோல மாயின மருக னாரும்
மின்னிலை வேற்க ணாளும் விண்ணிடை விடைமேற் கொண்டு
தந்நிலை வடிவாய்த் தோன்றத் தடங்கரை மீனந் தானும்
நன்னிலை வடிவே போன்று நந்தியாய் முந்தித் தோன்ற.

     (இ - ள்.) அந்நிலை - அப்பொழுது, வதுவைக்கோலம் ஆயின
மருகனாரும் - மணக்கோலம் பூண்ட மருகனாரும், மின் இலைவேல்
கணாளும் - ஒளியினையுடைய தகட்டுவடிவமைந்த வேல்போன்ற


     (பா - ம்.) *ஞாழற் செய்தெழுங்கோதை.