- எனது பாசம் ஒழியுமாறு,
வெள்விடைமேல் நின்ற கருணையே போற்றி
என்றான் - வெள்ளிய இடபவூர்தியின்மேல் நின்று காட்சி கொடுத்தருளிய
கருணையே வணக்கம் என்று கூறித்துதித்தனன்.
(அரக்கு
- செந்நிறம். (60)
அகவிலான் பரவி நின்ற வன்பனை நோக்கிப் பன்னாள்
மகவிலா வருத்த* நோக்கி யுமையைநா மகளாத் தந்து
தகவினான் மணந்தே நீயித் தரணியிற் றனத னென்ன
நகவிலாப் போக மூழ்கி நம்முல கடைவா யென்ன. |
((இ
- ள்.) அக இலான் - அடியார்களின் மனமாகிய
கோயிலையுடைய இறைவன், பரவி நின்ற அன்பனை நோக்கி - அங்ஙனம்
துதித்து நின்ற அன்பனைப்பார்த்து, பன்னாள் மகவு இலா வருத்தம் நோக்கி
- பலநாட்கள்வரை மகப்பேறின்மையாகிய நின் துன்பத்தினைக் கண்டு, நாம்
உமையை மகளாத்தந்து - நாம் உமாதேவியை நினக்குப் புதல்வியாகத் தந்து,
தகவினால் மணந்தேம் - முறைப்படி வந்து மணந்து கொண்டேம்; நீ
இத்தரணியில் - நீ இந் நிலவுலகின்கண் இருந்து, தனதன் என்ன நகவு
இலாப் போகம் மூழ்கி - குபேரனைப் போன்று இகழ்ச்சியில்லாத
போகத்திலழுந்தி, நம் உலகு அடைவாய் என்ன - (இறுதியில்) நமது
சிவலோகத்தை அடைவாயாக என்று.
(அகம்
- உள்ளம். தகவினால் - மரபுக்கேற்ற முறைமையால், நகவு -
நகுதல்; எள்ளுதல். (61)
பெண்ணினை வதுவைக் கீந்த பெருந்துறைச் சேர்ப்பற் கன்று
தண்ணளி சுரந்து நல்கித் தருமமால் விடைமேற் றோன்றி
விண்ணிடை நின்றான் சென்றான் வேத்திரப் படையா னோடும்
உண்ணிறை யன்ப ரோடு முத்தர கோச மங்கை.
|
((இ
- ள்.) பெண்ணினை வதுவைக்கு ஈந்த பெருந்துறைச் சேர்ப்பற்கு
- தனது புதல்வியைத் திருமணம் புரிதற்குக் கொடுத்த பெரிய
நெய்தற்றுறையை யுடைய சேர்ப்பனுக்கு, அன்று தண் அளிசுரந்து நல்கி -
அன்று பேரருள் சுரந்து அளித்தருளி, தருமம்மால் விடைமேல் - தருமமாகிய
பெரிய இடப மூர்த்தியின் மேல், விண்ணிடை தோன்றி நின்றான் -
வானின்கண் வெளிப்பட்டு நின்ற இறைவன், வேத்திரப் படையானோடும் -
பிரப்பம் படையினையுடைய திருநந்திதேவரோடும், உள் நிறை அன்பரோடும்
உத்தர கோசைமங்கை சென்றான் - உள்ளத்தில் நிறைந்த அன்பினையுடைய
அடியாரோடும் திருவுத்தரகோசமங்கைக்குச் சென்றருளினான்.
(நின்றான்,
பெயர். (62)
(பா
- ம்.) *மகவிலாவருமை.
|