பொருநர் ஆர்த்து
எள்ளும் மா ஒலி - வீரர்கள் ஆரவாரித்து ஒருவரை
ஒருவர் இகழ்ந்து கூறும் பேரொலியும், மள்ளர் பைங்கழல் ஏங்கும் மா
ஒலி- அவ்வீரர்கள் கட்டிய பசிய வீரக்கழல்கள் ஒலிக்கும் பேரொலியும்,
வீங்கு இயம் தெள்ளும் மா ஒலி - மிக்க இயங்கள் ஒலிக்கும் பேரொலியும்,
வேறுபாடு திரிந்து கல்லெனல் ஆயது - தம்முள் வேறுபாடு இன்றி ஒன்றாகி
எங்கும் கல்லென்னும் ஒலியாயிற்று.
மா
என்னும் ஓரெழுத்தொரு மொழி குதிரை, யானை, பெருமை
என்னும் பல பொருளில் வந்தது. தூண்டு தேர் தள்ளும் மா வொலி
என்பதற்குத் தூண்டப்படும் தேர்களால் உண்டாக்கப்படும் பேரொலி
என்றுரைத்தலுமாம். (15)
துடித்த வாளர வென்ன வீசிய தூங்கு கையின வீங்குநீர்
குடித்த காரொடு கார்ம லைந்திடு கொள்கை போல வுடன்றுடன்
றிடித்த வாயின வசனி யேறி னிருப்பு லக்கை யெடுத்தெறிந்
தடித்த சோரியொ டாவி சோர விழுந்த வெஞ்சின வானையே. |
(இ
- ள்.) துடித்த வாள் அரவு என்ன - துடிக்கும் ஒள்ளிய
பாம்புபோல, வீசிய தூங்கு கையின - வீசிய தொங்குகின்ற துதிக்கையை
யுடையனவாகி, வீங்கு நீர் குடித்த காரொடு கார் மலைந்திடு கொள்கைபோல
- மிக்க நீரைப் பருகிய முகிலோடு முகில் போர்புரியுந் தன்மைபோல,
உடன்றுஉடன்று அசனி ஏறின் இடித்த வாயின - மாறுபட்டு மாறுபட்டு
இடியேறுபோல முழங்கின வாயினையுடையனவாகி, இருப்பு உலக்கை எடுத்து
எறிந்து அடித்த சோரியொடு - இருப்புலக்கையை எடுத்து வீசி அடித்ததால்
வருங் குருதியோடு, ஆவிசோர - உயிருஞ்சோர, வெஞ்சின யானை விழுந்த
- கொடிய சினத்தையுடைய யானைகள் விழுந்தன.
யானையாற்
சுழற்றி வீசப்படும் துதிக்கை துடிக்கின்ற பாம்புபோலும்
என்றார்; வாளால் எறியப்பட்ட யானைக்கை உருமெறிந்த பாம்புபோற்புரளும்
எனக் களவழி நாற்பதில் வந்திருத்தல் நோக்கற் பாலது. ஏற்றின் எனற்
பாலது ஏறின் என விகாரமாயிற்று. அடித்த : பெயரெச்சம் காரணப்
பொருட்டாயது; ஆறு சென்ற வியர் என்புழிப்போல. விழுந்த : அன்பெறாத
முற்று. (16)
எய்த வாளி விலக்கு வார்பிறி தெய்யும் வாளித மார்புதோள்*
செய்த போதவ ராண்மை கண்டு சிரித்து வென்றி வியப்பரால்
வைத வாவடி வேலெ றிந்திட வருவ தைக்குறி வழியினாற்
கொய்த தார்மற வாளெ றிந்து குறைத்து வேறு படுத்துவார். |
(இ
- ள்.) எய்தவாளி விலக்குவார் - (பகைவர்) எய்த அம்பினை
விலக்குவாராகிய வீரர், பிறிது எய்யும்வாளி தம்மார்புதோள் செய்தபோது -
(மீண்டும் அவர்) எய்த வேறு கணை தமது மார்பினைத் துளைத்தபோது,
அவர் ஆண்மை கண்டு சிரித்து - அவரது ஆண்மையினைக்கண்டு
மகிழ்ந்து, வென்றிவியப்பர் - அவர் வெற்றியை வியந்து பாராட்டுவார்;
(பா
- ம்.) * மார்பு போழ்.
|