வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்197



ஆரணநூல் பொதுசைவ மருஞ்சிறப்பு நூலாம்
நீதியினா னுலகர்க்குஞ் சத்திநிபா தர்க்கும்
நிகழ்த்தியது நீண்மறையி னொழிபொருள்வே தாந்தத்
தீதில்பொருள் கொண்டுரைக்கு நூல்சைவம் பிறநூல்
திகழ்பூர்வம் சிவாகமங்கள் சித்தாந்த மாகும்ழு

என்னும் சிவஞானசித்தித் திருவிருத்தத் தாலறிக.

     சத்திநிபாதர் - சத்திநிபாதம் உடையோர்; சத்திநிபாதம் - திருவருட்
சத்திபதிதல்; தவம் சரியை முதல் நால்வகைப்பட்டு அவற்றுள்ளும் பலவேறு
வகைப்பட்டு நிகழ்தற் கேற்பப், பக்குவமாதற் பொருட்டு மலத்திற்கு
அநுகூலமாய் நின்று நடாத்திய திரோதானசத்தி மலம் பரிபாக மெய்தியவழி
அக்கருணை மறமாகிய செய்கை மாறிக் கருணை யெனப்படும் முன்னைப்
பராசத்தி ரூபமேயாய் ஆன்மாக் கண்மாட்டுப் பதிதல்; அதன் வகை பின்பு
காட்டப்பெறும். பாதம் - பதிதல்; வீழ்ச்சி. நி - ஏற்றமாக வென்னும் பொருள்
குறித்து நின்ற இடைச்சொல். (12)

வேத வாகமச் சென்னியில் விளைபொரு ளபேதம்
பேத மாகிய பிணக்கறுத் திருட்பிணி யவிழ்த்து
நாத னாகிய தன்னையு மென்னையு நல்கும்
போத னாகிய குருபரன் வருவதெப் பொழுதால்.

     (இ - ள்.) வேத ஆகமச் சென்னியில் - வேதங்களும்
ஆகமங்களுமாகிய இவற்றின் முடிவில், விளை பொருள் - விளையும்
பொருள், அபேதம் பேதமாகிய பிணக்கு அறுத்து - அபேதம் பேதம் என்று
கருதும் மாறுபாட்டினை ஒழித்து, இருள் பிணி அவிழ்த்து - ஆணவமலக்
கட்டினை அவிழ்த்து, நாதனாகிய தன்னையும் என்னையும் நல்கும் -
இறைவனாகிய தன்னையும் என்னையும் உணர்த்தியருளும், போதனாகிய
குருபரன் வருவது எப்பொழுது - ஞானவடிவினனாகிய குருநாதன் வருவது
எப்பொழுது.

     வேத வாகமம், தமிழ் நூன்முறையால் உடம்படுமெய்பெற்றது. வேதச்
சென்னியில் விளைபொருள் கடவுளும் ஆன்மாவும் அபேதம் எனவும்,
ஆகமச் சென்னியில் விளைபொருள் கடவுளும் ஆன்மாவும் பேதம் எனவும்,
ஆகலான் வேதாந்தமும் சித்தாந்தமும் தம்முள் முரணுவன வெனவும் கருதும்
மாறுபாட்டை யொழித்து என்க; கடவுளும் ஆன்மாவும் பொருட்டன்மையால்
வேறாயினும் கலப்பால் ஒன்றாதல் பற்றி மலநீக்கத்தின் பொருட்டு அதுவே
நான் எனப் பாவிக்கின் கடவுள் ஆன்மாவின் வேறன்றாய்த் தோன்றும்
என்பதே வேதமுடிவின் கருத்தாமாகலின் அஃது ஆகம முடிவுடன் முரணாதா
மெனப் பிணக்கறுத்தல் கொள்க; இப்பெற்றியை,

ழுகண்டவிவை யல்லேநா னென்றகன்று காணாக்
     கழிபரமு நானல்லே னெனக்கருதிக் கசிந்த
தொண்டினொடு முளத்தவன்றா னின்றகலப் பாலே
     சோகமெனப் பாவிக்கத் தோன்றுவன் வேறின்றி