விண்டகலு மலங்களெல்லாங் கருடதியா னத்தால்
விடமொழியு
மதுபோல விமலதையு மடையும்
பண்டைமறை களுமதுநா னானே னென்று
பாவிக்கச்
சொல்லுவதிப் பாவகத்தைக் காணேழு |
என்னும் சிவஞான சித்தியாராலறிக.
ழுவேதமோ டாகமம் மெய்யா மிறைவனூல்
ஓதுவும் பொதுவுஞ் சிறப்புமென் றுன்னுக
நாத னுரையிவை நாடி லிரண்டந்தம்
பேதம தென்னிற் பெரியோர்க் கபேதமேழு |
என்னும் திருமந்திரமும்
இங்கே சிந்திக்கற்பாலது. குருவருளாற் கடவுளைக்
கண்டே ஆன்மாவாகிய தன்னைக் காண்டல் இயல்வதாகலின் தன்னையும்
என்னையும் நல்கும் என்றார்; இதனை,
ழுசூரியகாந் தக்கல்லி னிடத்தே செய்ய
சுடர்தோன்றி
யிடச்சோதி தோன்று மாபோல்
ஆரியனா மாசான்வந் தருளாற் றோன்ற
வடிஞான
மான்மாவிற் றோன்றுந் தோன்றத்
தூரியனாஞ் சிவன்றோன்றுந் தானுந் தோன்றுந்
தொல்லுலக
மெல்லாந்தன் னுள்ளே தோன்றும்
நேரியனாய்ப் பரியனுமா யுயிர்க்குயிரா யெங்கு
நின்றநிலை
யெல்லாமுன் னிகழ்ந்து தோன்றும்ழு |
என்னுஞ் சித்தியாராலறிக.
ழுஞான நாட்டம் பெற்ற பின் யானும்
நின்பெருந்
தன்மையுங் கண்டேன் காண்டலும்
என்னையுங் கண்டேன் பிறரையுங் கண்டேன்
நின்னிலை
யனைத்தையுங் கண்டே னென்னே
நின்னைக் காணாமாந்தர்
தன்னையுங்
காணாத் தன்மை யோரே.ழு |
என்னும் பட்டினத்தடிகள்
திருவாக்கு முணர்க. (13)
கரவி லாதபே ரன்பினுக் கெளிவருங் கருணைக்
குரவ னாரரு ளன்றியிக் கொடியவெம் பாசம்
புரையில் கேள்வியாற் கடப்பது*புணையினா லன்றி
உரவு நீர்க்கடல் கரங்கொடு நீந்துவ?தொக்கும். |
(இ
- ள்.) கரவுஇலாத பேர் அன்பினுக்கு - கள்ளமில்லாத பெரிய
அன்பினுக்கு, எளிவரும் கருணைக் குரவனார் அருள் அன்றி -
எளிவந்தருளும் அருளையுடைய ஞானாசிரியரது திருவருட்புணையினா
(பா
- ம்.) * கேள்வியாற் கழிப்பது, ? கரங்கொடு நீங்குவது.
|