வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்199



லன்றி, இக்கொடிய வெம்பாசம் - இந்தக் கொடிய வெவ்விய பாசமாகிய
கடலை, புரைஇல் கேள்வியால் கடப்பது - குற்றமில்லாத நூற்கேள்வியினால்
கடக்கக் கருதுதல், உரவு நீர்க்கடல் கரங்கொடு நீந்துவது ஒக்கும் - வலிய
நீரினையுடைய கடலைக் கையினால் நீந்திக் கடக்கக் கருதுதலை ஒக்கும்.

இறைவன் கரவுடையார்க் கறிவரியன் என்பதனை,
ழுகரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைழு

ழுபொக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு
நக்கு நிற்ப னவர்தமை நாணியேழு


என்னும் தேவாரங்களானறிக. கொடிய வெம், ஒரு பொருளில் வந்த இரு
சொல். நீந்துவதொக்கும் என்றது முடியா தென்றவாறு. (14)

என்றவ் வாதவூர்*மறையவ ரின்பவீ டெய்தத்
துன்று மாசையாற் றொடக் குண்டு சுருதியா கமநூல்
ஒன்று கேள்வியோர் வருந்தொறு முணர்ந்தவ ரிடைத்தாஞ்
சென்று காண்டொறு மளவளாய்த் தேர்குவா ரானார்.

     (இ - ள்.) என்று அவ்வாதவூர் மறையவர் - என்று கருதி
அவ்வாதவூரராகிய அந்தணர், இன்பவீடு எய்தத்துன்றும் ஆசையால்
தொடக்குண்டு - பேரின்ப வீட்டினை அடைய வேண்டுமென்னும் மிக்க
ஆசையினாற் கட்டுண்டு, சுருதி ஆகம நூல் ஒன்று கேள்வியோர்
வருந்தொறும் - வேதமும் ஆகமமுமாகிய நூல்களிற் பொருந்திய
கேள்விவல்லுநர் தம்மிடம் வருந்தோறும், உணர்ந்தவர் இடை தாம் சென்று
காண்தொறும் - அவற்றை உணர்ந்தாரிடந் தாஞ்சென்று காணுந்தோறும்,
அளவளாய்த் தேர்குவார் ஆனார் - அவர்களோடு கலந்து
ஆராய்வாராயினர்.

     மேல் நான்கு பாட்டிலும் சொன்னவற்றைச் சுட்டி ‘என்று’ என்றார்.
கேள்வியோர் நகர்க்கு வருந்தொறும் உணர்ந்து அவரிடைத் தாம் சென்று
காண்டொறும் என்றுரைத்தலுமாம்;

ழுவளங்கெழு புவியி னுள்ள வாவியுங் காவு மோடி
விளங்கிசை வண்டு தண்டேன் மிகுமலர் தேடு மாபோல்
உளங்கொள நிமல னன்னூ லோதின ருண்மை யெல்லாம்
அளந்தறி வுணர்ந்த நீரார் யாவரென் றாயு நாளில்ழு

என்பது வாதவூரடிகள் புராணம். (15)

எண்ணி லாரிடத் தளந்தளந் தறிபொரு ளெல்லாம்
உண்ணு நீர்விடாய்க் குவரிநீ ருண்டவ ரொப்ப
அண்ண லாரகத் தமைவுறா தரசனுக் குயிருங்
கண்ணு மாயமைச் சுரிமையுங் கைவிடா தியல்வார்


     (பா - ம்.) * என்றிவ்வாதவூர்.