வை தவா வடிவேல் எறிந்திட
- கூர்மை நீங்காத வடித்த வேற்படையினைப்
பகைவர்வீச, வருவதை - வருகின்ற அவ்வேற்படையை, குறிவழியினால் -
குறிவைக்கும் நெறியினால், கொய்ததார் மறவாள் எறிந்து - கொய்த
மாலையணிந்த வீரவாளை வீசி, குறைத்து வேறுபடுத்துவார் - துண்டித்து
அழிப்பார்.
தோள்,
தோட்ட என்பதன் முதனிலை : போழ்செய்த என்னும்
பாடத்திற்குப் பிளந்த என்றுரைக்க. வாளிமார்பினைத் துளைத்தபொழுது
சிரித்து வியப்பர் என்றது அவரது ஊறஞ்சா மறத்தினை விளக்கியபடி. வை
- கூர்மை. கொய்த்தார் என்புழிச் சினையடை முதலொடு வந்தது. (17)
பின்னி டாதிரு படையு மொத்தம ராடு மெல்லை பெரும்படைச்
சென்னி தன்றுணை யாய வுத்தர தேய மன்னவர் படையொடுந்
துன்னி ஞால முடிக்கு நாளெழு சூறை தள்ள வதிர்ந்தெழும்
வன்னி யென்ன வுடன்றெ திர்ந்தனன் வழுதி சேனை யுடைந்ததே. |
(இ
- ள்.) பின்னிடாது இருபடையும் ஒத்து அமர் ஆடும் எல்லை -
இங்ஙனம் புறங்காட்டாமல் இருதிறத்துச் சேனைகளும் ஒத்துப் போர்
புரியும்போது, பெரும் படைச் சென்னி - பெரிய படையினையுடைய சோழன்,
தன்துணை ஆய உத்தரதேய மன்னவர் படையொடும் துன்னி - தனக்கு
உதவியாகிய வடநாட்டுவேந்தர் படையோடும் நெருங்கி, ஞாலம் முடிக்கும்
நாள் எழு சூறைதள்ள - உலகத்தை அழிக்கும் நாளில் எழுந்த ஊழிக்காற்று
உந்துவதால், அதிர்ந்து எழும் வன்னி என்ன - முழங்கி யெழுந்த ஊழித்
தீயைப்போல, உடன்று எதிர்ந்தனன் - வெகுண்டு எதிர்ந்தான்; வழுதிசேனை
உடைந்தது - (அவ்வளவில்) பாண்டியன் சேனை சிதைந்தோடியது.
ஞாலம்
முடிக்குநாள் - ஊழிக்காலம். சூறை - பெருங்காற்று. (18)
மின்ன லங்கிலை * வாளொ டுஞ்சிலை வில்லி ழந்தனர் வீரரே
பன்ன லம்புனை தேரொ டுங்கரி பரியி ழந்தனர் பாகரே
தென்ன வன்பொரு வலியி ழந்தன னென்று செம்பியன் வாகையுந்
தன்ன தென்று தருக்கு மேல்கொடு சங்கெ டுத்து முழக்கினான். |
(இ
- ள்.) வீரர் -பாண்டியன் படைவீரர், மீன் அலங்கு
இலைவாளொடும் சிலைவில் இழந்தனர் - மின்போல விளங்கும் தகட்டு
வடிவமாகிய வாட்படையோடு ஒலித்தலையுடைய வில்லையும் இழந்தனர்;
பாகர் - பாகர்கள், பல் நலம்புனை தேரொடும் கரிபரி இழந்தனர் - பலவகை
நலம்பெற அலங்கரிக்கப்பட்ட தேரோடு யானைகளையும் குதிரைகளையும்
இழந்தார்கள்; செம்பியன் - விக்கிரம சோழன், தென்னவன் பொருவலி
இழந்தனன் என்று - பாண்டியன் பொருதற்குரிய வலியை இழந்து விட்டனன்
என்றும் (அதனால்), வாகையும் தன்னது என்று - வெற்றியும் தன்னுடைய
(பா
- ம்.) * மின்னிலங்கிலை.
|