(இ
- ள்.) எண்ணிலார் இடத்து அளந்து அளந்து அறிபொருள்
எல்லாம் - (இங்ஙனம்) அளவிறந்த அறிஞரிடத்து ஆராய்ந்தறிந்த
பொருளெல்லாவற்றானும், உண்ணும் நீர்விடாய்க்கு - பருகும் நீர்
வேட்கையைத் தணிப்பதற்கு, உவரி நீர் உண்டவர் ஒப்ப - கடல் நீரைப்
பருகியவரின் வேட்கை தணியாவாறு போல, அண்ணலார் அகத்து
அமைவுறாது - பெருமை பொருந்திய வாதவூரர் மனத்தின் கண் அமைதி
பொருந்தாதாக, அரசனுக்கு உயிரும் கண்ணுமாய் - மன்னனுக்கு உயிரும்
விழியுமாகி, அமைச்சு உரிமையும் கைவிடாது இயல்வார் -
அமைச்சுரிமையையும் கைவிடாது நடப்பாராய்.
அடுக்கு
பன்மைகுறித்தது. அறிபொருள் எல்லாவற்றானும் அமைதி
யுறாதாக என விரித்துரைக்க. கடலின் உவர் நீருண்டால் விடாய் தணியாது
மிகுதல்போல இவர்க்கும் அமைதியுண்டாகாது உண்மையுணரும் வேட்கை
மிகுவதாயிற்று;
ழுசாத்திரத்தை யோதினர்க்குச்
சற்குருவின் றன்வசன
மாத்திரத்தே வாய்க்குநலம் வந்துறுமே - ஆர்த்தகடற்
றண்ணீர் குடித்தவர்க்குத் தாகந் தணிந்திடுமோ
தெண்ணீர்மை யாயிதனைச் செப்புழு |
என்னும் திருக்களிற்றுப்படியார்ச்
செய்யுள் இங்கு அறிதற்பாலது. அரசன்
எல்லாப் போகங்களையும் நுகர்தற்கும் நல்வழியில் நடத்தற்கும்
கருவியாயிருந்தன ரென்பார் அரசனுக்குயிருங் கண்ணுமாய் என்றார். (16)
கள்ளக் காதல னிடத்தன்பு கலந்துவைத் தொழுகும்
உள்ளக் காரிகை மடந்தைபோ லும்பரைக் காப்பான்
பள்ளக் காரியுண் டவனிடத் துள்ளன்பு பதிந்து
கொள்ளக் காவல னிடைப்புறத் தொழிலுமுட் கொண்டார். |
(இ
- ள்.) கள்ளக்காதலனிடத்து - கள்ளநாயகனிடத்தில் உள்ள,
அன்பு உள்ளம் கலந்துவைத்து - அன்பினை அகத்தின்கண் பொருந்த
வைத்து, ஒழுகும் காரிகை மடந்தை போல் - அழகிய ஒரு பெண்
(புறத்தின்கண் கொண்ட நாயகனுக்குச் செய்யும் புறத்தொழிலில் வழுவாது)
ஒழுகுமாறு போல, உம்பரைக் காப்பான் - தேவர்களைப்பாதுகாக்கும்
பொருட்டு, பள்ளக்காரி உண்டவனிடத்து - கடலின் நஞ்சினை உண்ட
இறைவனிடத்து வைத்த, அன்பு உள்பதிந்து கொள்ள - அன்பானது
உள்ளத்தின்கண் அழுந்தி (அதனைக்கவர்ந்து) கொள்ள, காவலனிடை
புறத்தொழிலும் உட்கொண்டார் - மன்னனிடத்துப் புறத்தொழிலையும்
உட்கொண்டு வழுவாது ஒழுகுவாராயினர்.
பள்ளம்
- ஆழம்; கடலுக்காயிற்று. காரி - கருமையுடைய நஞ்சு.
பதிஞானம் தலைப்படுவார் எத்தொழிலில் நிற்பினும் தம் நிலைகுலையார்
என்பதனை,
ழுநாடுகளிற் புக்குழன்றுங்
காடுகளிற் சரித்து நாகமுழை
புக்கிருந்துந் தாகமுத றவிர்ந்தும் |
|
|