(இ
- ள்.) எடுத்த பொன்சுமை - கருவூலத்தினின்றும் எடுத்தபொன்
சுமையை, ஒட்டகத்து இட்டுமுன் ஏகவிடுத்து - ஒட்டகத்தில் ஏற்றி
அவைமுன்னே செல்லுமாறு ஏவி, விண்தொடு - வானை அளாவிய,
திண்திமில் விடையவன் கோயில் அடுத்து - திண்ணிய திமிலையுடைய
இடபவூர்தியை உடைய சோமசுந்தரக் கடவுளின் திருக்கோயிலுட்சென்று,
அவிழ்ந்த பொன் அம்புயத்தடம்படிந்து - மலர்ந்த பொற்றாமரையினை
யுடைய வாவியின்கண் நீராடி, அனைய மடுத்தடம் கரை - அந்த ஆழமாகிய
பொய்கையினது கரையின்கண் எழுந்தருளிய, சித்தி ஐங்கரத்தனை வணங்கா
- ஐந்துகைகளையுடைய சித்திவிநாயகனை வணங்கி.
விண்டொடு
கோயில் எனக்கூட்டுக. திமில் - சூடு; கொண்டையெனவும்
வழங்கும். (22)
கருணை நாயகி
யங்கயற் கண்ணியெம் பிராட்டி
அருண நாண்மலர்ச் செய்யசீ றடித்தல மிறைஞ்சி
வருண னார்பெரு வயிற்றுநோய் வலிகெடுத் தாண்ட
தருண நாண்மதிச் சடையுடைய யடிகண் முன்றாழா. |
(இ
- ள்.) கருணை நாயகி அங்கயற்கண்ணி - அருட்சத்தியாகிய
அங்கயற்கண்ணி என்னும், எம்பிராட்டி - எமது பெருமாட்டியின், அருணநாள்
மலர் - சிவந்த அன்றலர்ந்த தாமரைமலர் போலும், செய்ய சீறடித்தலம்
இறைஞ்சி - சிவந்த சிறிய திருவடிகளை வணங்கி, வருணன் ஆர்பெருவயிற்று
நோய்வலி கெடுத்து - வருணனது நிறைந்த பெரிய வயிற்றினது நோயின்
வன்மையைப்போக்கி, ஆண்ட - ஆண்டருளிய, தருண நாள் மதிச் சடை
உடை - இளமையாகிய பிறைமதியினைத் தரித்த சடையினையுடைய, அடிகள்
முன்தாழா - இறைவன் திருமுன் வணங்கி.
அருணம்
- செந்நிறம். வருணனது வயிற்றுநோய் கெடுத்தமையை இப்
புராணத்து வருணன் விட்ட கடலை வற்றச்செய்த படலத்திற் காண்க.
மலநோயை முருக்கிச் சிவஞானம் பெருக்க வணங்கினார் என்பது
குறிப்பிற்றோன்ற வருணனார் பெருவயிற்று நோய் வலிகெடுத்தாண்ட
தருணநாண்மதிச் சடையுடை யடிகண்முன்றாழா என்றார்.
ஒன்று வேண்டுமிப் பொருளெலா முனக்குமைம் பொறியும்
வென்று வேண்டுநின் னன்பர்க்கு மாக்குக வெள்ளி
மன்று வேண்டிநின் றாடிய வள்ளலென் குறையீ
தென்று வேண்டிநின் றேத்துவார்க் கிறைவனின் னருள்போல். |
(இ
- ள்.) வெள்ளிமன்று வேண்டிநின்று ஆடியவள்ளல் -
வெள்ளியம் பலத்தினை விரும்பி நின்று ஆடியருளிய வள்ளால், ஒன்று
வேண்டும் - (அடியேனுக்கு) ஒருவரம் அருளல் வேண்டும், இப்பொருள்
எலாம் - (அதாவது) இப்பொருள் அனைத்தையும், உனக்கும் - நினக்கும்,
ஐம்பொறியும் வென்று வேண்டும் நின் அன்பர்க்கும் ஆக்குக -
ஐம்பொறிகளையும்
(பா
- ம்.) சீரடி.
|