என எண்ணி - வீற்றிருக்கும்
இடம் இதுவே என்று கருதி, நகர் புக்கார் -
அந்நகருட் புகுந்தனர்.
கருக்குமவன்
- கருக்குவான். இதென, விகாரம். (32)
காயிலை யடைந்தகழு முட்படை வலத்தார்
கோயிலை யடைந்துகுளிர் வான்புனல் குடைந்து
வாயிலை யடைந்துடல மண்ணுற விழுந்து
வேயிலை யடைந்தவரை மெய்ப்புகழ் வழுத்தா. |
(இ
- ள்.) காய் இலை அடைந்த கழுமுள் படை வலத்தார் -
வருத்துகின்ற தகட்டு வடிவமமைந்த சூலப்படையினை வலக்கரத்தில்
ஏந்திய இறைவரது, கோயிலை அடைந்து - திருக்கோயிலைச் சார்ந்து,
குளிர்வான்புனல் குடைந்து - தண்ணிய சிறந்த புனலில் நீராடி, வாயிலை
அடைந்து - திருவாயிலை அடைந்து, உடலம் மண்ணுற விழுந்து - உடல்
மண்ணிற்றோயுமாறு விழுந்து வணங்கி, வேய் இலை அடைந்தவர்
மெய்ப்புகழை வழுத்தா - மூங்கிலாகிய திருக்கோயிலை அடைந்த
அவ்விறைவரது உண்மையமைந்த புக ழினைத்துதித்து.
நெல்லைப்பதியில்
மூங்கிலிற்றோன்றினா ராதலின்
வேயிலையடைந்தவரை என்றார். அடைந்தவரை என்பதிலுள்ள
ஐகாரத்தைப் பிரித்துப் புகழ் என்பதனோடு கூட்டுக; புகழ் வழுத்தா
என்பதை ஒரு சொல்லாகக் கொண்டு இரண்டாவதற்கு முடிபாக்கலுமாம். (33)
ஆலய மருங்குவல மாகவரு வார்முன்
மூலமறை யோதிமுடி யாதபொரு டன்னைச்
சீலமுனி வோர்தெளிய மோனவழி தேற்றுங்
கோலமுறை கின்றதொர் குருந்தையெதிர் கண்டார். |
(இ
- ள்.) ஆலயம் மருங்கு வலமாக வருவார் - அத்திருக்கோயிலின்
கண் வலமாகவரும் அவ்வாதவூரடிகள், முன் - முன்னொரு காலத்தில்,
மூலம் மறை ஓதி முடியாத பொருள் தன்னை - முதனூலாகிய மறையினை
ஓதியும் அறிய முடியாத பொருளை, சீல முனிவோர் தெளிய -
தவவொழுங்கினை யுடைய சனகாதி முனிவர்கள் தெளியுமாறு, மோனவழி
தேற்றும் கோலம் உறைகின்றது - மௌனநெறியினாற் றெளிவித்த
திருக்கோலம் வீற்றிருக்கப் பெற்றதாகிய, ஓர் குருந்தை எதிர் கண்டார் -
ஒரு குருந்த மரத்தினை எதிரே கண்ணுற்றார்.
மோனவழி
தேற்றுதல் - திருவாய் மலர்ந்தருளாது மோன
முத்திரையத்தனாய் இருந்து காட்டுதல்; கடவுள் வாழ்த்தானுமறிக. ஆல்
நிழலில் நால்வர்க்கு ஒளி நெறி காட்டிய அக்கோலத்துடனேயே இங்கே
குருந்தினிழலில் எழுந்தருளி யிருந்தாரென்க. (34)
|