கலிநிலைத்துறை.
|
வேத நூலொரு
மருங்கினு மெய்வழிச் சைவப்
போத நூலொரு மருங்கினும் புராணத்துட் கிடந்த
கீத நூலொரு மருங்கினுங் கிளைகெழு சமய
பேத நூலொரு மருங்கினும் வாய்விட்டுப் பிறங்க. |
(இ
- ள்.) வேதநூல் ஒரு மருங்கினும் - மறைநூல் ஒரு பாலும்,
மெய்வழிச் சைவப் போத நூல் ஒரு மருங்கினும் - உண்மை நெறியைக்
கூறும் ஆகமமாகிய ஞானநூல் ஒரு பக்கத்தும். புராணத்துள் கிடந்த கீத
நூல் ஒரு மருங்கினும் - புராணத்துடன் கிடந்த இசைநூல் ஒரு சிறையும்,
கிளை கெழு சமய பேதநூல் ஒரு மருங்கினும் - பல கிளைகளையுடைய
வேற்றுமைப்பட்ட சமய நூல்கள் ஒரு மருங்கினும். வாய்விட்டுப் பிறங்க -
வாய் விட்டு ஒலிக்கவும்.
புராணத்துடன்
கிடந்த கீத நூல் என்க; மூன்றனுருபு நிற்குமிடத்து
ஏழனுருபு நிற்றல் வேற்றுமை மயக்கம். இசை விருப்பினராதலின் கீதநூலுங்
கூறினார்;
"அளப்பில கீதஞ் சொன்னார்க்
கடிகடா மருளுமாறே" |
என்னும் தமிழ்
மறையுங் காண்க. பிறங்க - விளங்க;
ஒலித்தல் மேற்று. (35)
சுருதி கூறிய
வறமுத னான்குமத் தொன்னூற்
கரிய தாங்கதிக் கேதுவென் றாகமங் காட்டுஞ்
சரியை யாதிநாற் பாதமுந் தலைதெரிந் துணர்ந்த
பெரிய மாணவர் கழகமும் வினாவிடை பேச. |
(இ
- ள்.) சுருதி கூறிய அறம்முதல் நான்கும் - மறைகள் கூறிய
அறமுதலிய பொருள் நான்கினையும், அத் தொல்நூற்கு அரியதாம் கதிக்கு
- அம் முதனூலுக்கு அரியதாகிய வீடுபேற்றுக்கு, ஏது என்று ஆகமம்
காட்டும் - கருவி என்று ஆகமங்கள் கூறும், சரியை ஆதிநாற்பாதமும் -
சரியை முதலிய பாதங்கள் நான்கினையும், தலைதெரிந்து உணர்ந்த -
சிக்கறுத்து உணர்ந்த, பெரிய மாணவர் கழகமும் - பெரிய மாணவர்
கூட்டங்களும், வினாவிடை பேச - வினாவும் விடையுமாகப் பேசவும்.
நாற்பாதம்
- சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன. சரியை -
சிவபிரான், உயிர்கள் சோபான முறையானுணர்ந்து உய்தற் பொருட்டுக்
கொண்டருளிய தூலம், சூக்குமம், அதிசூக்குமம் என்னும் மூவகை
வடிவினுள்ளே நுண்ணுணர்வின்மையிற் சகளமாகிய தூல வடிவ
மாத்திரத்தைப் பொருளென்றுணர்ந்து காயத்தொழின் மாத்திரையால்
ஆகமத்தின் விதித்தவாறு வழிபடுதல்; கிரியை - அஃது அடிப்பட்டு வரவர
நிகழும் பக்குவ விசேடத்தால் நுண்ணுணர்வுடையராய்ச் சகள நிட்களமாகிய
சூக்கும வடிவமே பொருள், சகள வடிவம் அதனை வழிபடுதற்கிடமாகிய
|