வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்213



"அகலிடமே யிடமாக வூர்க டோறும்
     அட்டுண்பா ரிட்டுண்பார் விலக்கா ரையம்
புகலிடமா மம்பலங்கள் பூமிதேவி
     யுடன்கிடந்தாற் புரட்டாள்பொய் யன்று மெய்யே"
எனவும்,
"உறவாவா ருருத்திரபல் கணத்தினோர்க
     ளுடுப்பனகோ வணத்தொடுகீ ளுளவா மன்றே"

எனவும் வரும் தமிழ் மறைகள் இங்கே சிந்திக்கற் பாலன. முதல் இடை
ஈறு என்பதற்குச் சிருட்டி திதி சங்காரம் என்னும் முத்தொழிலும், இறப்பு
நிகழ்வு எதிர்வு என்னும் முக்காலமும,் முதல் இடை கடை என்னும்
மூவிடமும் கொள்க (40)

இத்த கைப்பல தொண்டர்தங் குழாத்திடை யாலம்
ஒத்த பைங்குருந் தடியினில் யோகவா சனத்திற்
புத்த கத்தெழு தியசிவ ஞானமெய்ப் போதங்
கைத்த லந்தரித் திருப்பதோர் கருணையைக் கண்டார்.

     (இ - ள்.) இத்தகைப் பல தொண்டர் தம் குழாத்திடை - இத்தன்மை
யுடைய பல அடியார் கூட்டத்தின் நடுவில், ஆலம் ஒத்த பைங்குருந்தினில் -
கல்லால மரம் போன்ற பசிய குருந்த மரத்தினடியில், யோக ஆசனத்தில் -
யோகா சனத்தில், புத்தகத்து எழுதிய சிவஞான மெய்ப்போதம் -
உண்மையாகிய சிவஞான போதம் எழுதிய சுவடியினை, கைத்தலம்
தரித்திருப்பதோர் கருணையைக் கண்டார் - திருக்கரத்தின்கண்
தாங்கியிருக்கும் ஒரு அருள் வடிவத்தைக் கண்டனர்.

     யோகவாசனம், தமிழ் நூன் முடிபு. எழுதிய புத்தகத்தை என்க. (41)

மன்று ளாடிய வானந்த வடிவமும் வடவால்
ஒன்றி நால்வருக் கசைவற வுணர்த்திய வுருவும்
இன்று நாயினேற் கெளிவந்த விவ்வுரு வென்னா
அன்று நாயகன் குறிப்புளத் துணர்த்திட வறிந்தார்.

     (இ - ள்.) அன்று நாயகன் குறிப்பு உளத்து உணர்த்திட - அங்ஙனங்
கண்ட காலை இறைவனது திருவருட் குறிப்பு உள்ளத்தின்கண்
உணர்த்தியருளுதலால், இன்று நாயினேற்கு எளிவந்த இவ்வுரு - இப்பொழுது
நாயேனுக்கு எளி வந்த இக்கருணை வடிவமானது, மன்றுள் ஆடிய ஆனந்த
வடிவமும் - அம்பலத்திலே திருக் கூத்தாடி யருளிய இன்பவடிவமும்,
வடவால் ஒன்றி - கல்லாலின் கீழிருந்து, நால்வருக்கு அசைவு அற
உணர்த்திய உருவும் - சனகாதி முனிவர் நால்வருக்கும் மன அசைவு
நீங்குமாறு உணர்த்தி யருளிய வடிவமுமே, என்னா அறிந்தார் - என்று
உணர்ந்தார்.